PRO உடன் கூட அட்ஜெஸ்ட் பண்ணணும்.. ஹீரோக்கள் கவலைப்பட மாட்டாங்க.. குட்டி பத்மினி பகீர் பேட்டி!

சென்னை: திரிஷா மற்றும் மன்சூர் விவகாரம் தொடர்பாக பேசிய நடிகை குட்டி பத்மினி சினிமா துறை பல ஆண்டுகளாக ஆணாதிக்கம் நிறைந்த துறையாகவே உள்ளது என்றும் நடிகைகளுக்கு இங்கே பெரியளவில் பாதுகாப்பு இல்லை எனக் கூறியுள்ளார்.

மன்சூர் அலி கான் பேசியது தப்பு தான் என்றும் ரஜினிகாந்த் அந்த தொனியில் பேசவில்லை என்றும் தனது பேட்டியில் குட்டி பத்மினி விளக்கி உள்ளார்.

Kutty Padmini opens up about actress suffers adjustment issue even PRO shocks fans

மேலும், நடிகைகளுக்கு பாலிவுட் முதல் கோலிவுட் வரை காஸ்டிங் கோச் தொல்லை இருப்பது உண்மை தான் என்றும் ஆனால், நடிகைகள் எதிலும் சிக்காமல் சினிமாவில் சாதிக்க முயற்சிக்க வேண்டும் என குட்டி பத்மினி பேசியுள்ளார்.

சினிமாவில் ஆணாதிக்கம்: நடிகர்கள் தங்கள் பற்றிய தவறுகள் வெளியே தெரிந்தால் அதை பற்றியெல்லாம் கவலைப்படமாட்டார்கள். அடுத்த முறை மேலும், கவனமாக தவறுகளை எப்படி செய்வது என்பதை மட்டுமே பார்ப்பார்கள் என நடிகை குட்டி பத்மினி சமீபத்திய பேட்டியில் பேசி பகீர் கிளப்பி உள்ளார்.

பிஆர்ஓ கூட விடமாட்டானுங்க: ஆரம்பத்தில் தயாரிப்பாளர், இயக்குநர், ஹீரோ என நடிகைகள் ப்ளீஸ் செய்ய வேண்டிய கட்டாயம் சினிமாவில் இருந்தது. தற்போது PRO உடன் வரை நடிகைகள் படுக்கையை பகிர்ந்து கொள்வதாக ஷாக்கிங் தகவல்கள் வெளியாகின்றன. நடிகைகள் சொந்த விருப்பத்தின் பேரில் எதை வேண்டுமானால் செய்யலாம் அதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால், கட்டாயப்படுத்தினால் அது தான் தவறான செயல் என குட்டி பத்மினி விளக்கம் கொடுத்துள்ளார்.

மன்சூர் பேசியது தவறு: திரிஷா விவகாரத்தில் மன்சூர் அலி கான் சாதாரணமாக நினைத்து அவரது வக்கிரத்தை கொட்டி விட்டார். பிரச்சனையே அதுதான். நடிகை தமன்னா உடன் நடிக்க வேண்டும் என ரஜினி கேட்டதில் தவறு இல்லை. அவர் பயன்படுத்திய வார்த்தைகளிலும் தவறு கிடையாது. ஆனால், பலாத்கார வார்த்தையை மன்சூர் அலி கான் பயன்படுத்திய விதம், அவரது எண்ணம் என அனைத்துமே தவறு தான் என குட்டி பத்மினி விளாசி உள்ளார்.

ஸ்ரீதேவி பொண்ணுன்னா சும்மா இருப்பாங்க: சினிமாவில் பெரிய நடிகர்கள் வாரிசுகள் என்றால் தைரியமாக கேட்க மாட்டார்கள். நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரை கேட்க யாருக்காவது தைரியம் இருக்குமா? நடிகைகள் தேவையென்றால் அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனை வராது, நடிகைகள் வாய்ப்பு தேடி சென்றால், சிலர் அதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்வது சினிமாவில் இருக்கத்தான் செய்கிறது என கசப்பான உண்மையை ஓபனாக உடைத்து பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X