வைரமோதிரம், தூக்க மாத்திரை.. வாழ்க்கையை முடித்துக்கொண்ட கல்பனா.. குட்டி பத்மினி சொன்ன ஷாக் நியூஸ்!
சென்னை: கன்னட சினிமாவில் கொடி கட்டிப்பறந்தவர் நடிகை கல்பனா. நடிகர் புட்டண்ணாவின் பிரிவு, பண நெருக்கடி என மன அழுத்தத்தில் இருந்த கல்பனா, திடீரென வைர மோதிரத்தை உடைத்து, 56 தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நடிகை குட்டி பத்மினி வீடியோவில் பேசி உள்ளார்
90கால கட்டத்தில், மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் கன்னட நடிகை கல்பனா. இவர், 1963ம் ஆண்டு இல் வெளியான சாக்கு மகளு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் புட்டண்ணா கனகலுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்தார். இவர்கள் இருவரும் நடித்த திரைப்படம் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகபெரிய அளவில் வெற்றி பெற்றது. ஷரபஞ்சரா என்ற படத்தில், காவேரி என்கிற கேரக்டரில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான கர்நாடக அரசின் மாநில விருதை பெற்றார்.

கன்னட நடிகை கல்பனா: 1960ம் ஆண்டு தொடங்கி 1970களில் ஷரபஞ்சரா, கெஜ்ஜே பூஜே, பெல்லி மோடா, ஈரடு கனசு, கப்பு பிலுபு, பயலு தாரி, கந்ததா குடி, பங்கரடா ஹூவு போன்ற மூலம் கன்னட திரைப்படத்திலும், மெட்ராஸ் டு பாண்டிச்சேரி மற்றும் சாது மிரண்டால் ஆகிய தமிழ் படங்களிலும் நடித்து சினிமாவை ஆட்சிசெய்து வந்த இவர், அளவிற்கு அதிகமான தூக்க மாத்திரையை உட்கொண்டு 1979ம் ஆண்டு அவரது வாழ்க்கையை முடித்துக்கொண்டார்.
நடிகை குட்டி பத்மினி: இவர் குறித்து நடிகை குட்டிபத்மினி தனது யூடியூப் சேனலில் பேசி உள்ளார். அதில், கல்பனா கன்னட சினிமாவிற்கு கிடைத்த வைரம், தமிழ் சினிமாவிற்கு சாவித்ரி எப்படியோ அப்படித்தான் அங்கு கல்பனா இருந்தார். இவர்களின் சாயல், நடை உடை எல்லாம் கொஞ்சம் சரோஜா தேவி போல இருக்கும். கன்னட சினிமாவில் டாப் நடிகையாக இருந்த கல்பனா முதல் முதலில் ராகவேந்திரா என்ற படத்தில் ஒரு சின்ன ரோலில் தான் நடித்திருந்தார். இவரின் நடிப்பு திறமையை பார்த்த தயாரிப்பாளர், அப்போது அவருக்கு 2,500 ரூபாய் சம்பளமாக கொடுத்தார். ஆனால், அதை வாங்க மறுத்து ராகவேந்திராவிற்கு என் காணிக்கையாக வைத்துக்கொள்ளுங்கள் என்றார். அந்த படம் வெளியாவதற்குள் கல்பனா அவர்களுக்கு பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.

புட்டண்ணா கனகலுடன் காதல்: கன்னடம், தமிழ், தெலுங்கு என பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் அதிகமாக புட்டண்ணா கனகலுடன் சேர்ந்து நடித்ததால் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். ஆனால், புட்டண்ணா கனகனுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருந்ததால், அவரால் இந்த உறவை வெளிப்படையாக சொல்லமுடியவில்லை. இதனால் மன வேதனையில் இருந்த கல்பனா, இனிமேல் நாம் சேர்ந்து படம் நடிக்க வேண்டாம் தனித்தனியாக நடிக்கலாம் என்று முடிவு எடுத்துவிட்டு பிரிந்துவிடுகின்றனர்.
திடீர் தற்கொலை: இது அவருக்கு மிகபெரிய மன வேதனையை கொடுக்கிறது. இந்த நேரத்தில் இவர் நடித்த படங்கள் சரியாக போகாமல், பட வாய்ப்பும் குறைத்து போய் பண நெருக்கடிக்கு ஆளாகிறார். புட்டண்ணாவின் பிரிவு, பண நெருக்கடி என மன அழுத்தத்தில் இருந்த அவர், திடீரென ஒரு நாள் வைர மோதிரத்தை உடைத்து, 56 தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால், அவரின் தற்கொலைக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. அவர் மனதை எது காயப்படுத்தியது என்று தெரியவில்லை என்று குட்டி பத்மினி அந்த வீடியோவில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











