குக் வித் கோமாளி அஸ்வினுக்கு பிறந்தநாள்.. சூப்பரா வாழ்த்திய குட்டி பட்டாஸ் ஹீரோயின்!

சென்னை: குக் வித் கோமாளி சீசன் 2வில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அஸ்வினுக்கு இன்று பிறந்தநாள்.

Recommended Video

Office Serialல் நடித்த Ashwin Kumar | Vijay Tv, Cook with Comali, Ashwin Sivangi

கோயம்புத்தூரில் இருந்து சினிமா கனவுகளுடன் கோடம்பாக்கம் வந்த அஸ்வின் பல தடைகளை கடந்து இன்று ரசிகர்களின் ஃபேவரைட் ஆகி உள்ளார்.

குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வினின் பிறந்தநாளை முன்னிட்டு குட்டி பட்டாஸ் பாடலில் அவருடன் இணைந்து நடித்த ரெபா மோனிகா ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்தி உள்ளார்.

ஹேப்பி பர்த்டே அஸ்வின்

ஹேப்பி பர்த்டே அஸ்வின்

கோவையை சேர்ந்த நடிகர் அஸ்வின் சினிமாவில் நடிகராக சாதிக்க வேண்டும் என கோடம்பாக்கத்தில் குடிபுகுந்து நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு தற்போது குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி மூலம் ஏகப்பட்ட ரசிகைகளின் கனவுக் கண்ணனாக வலம் வருகிறார். இன்று பிறந்தநாள் காணும் அஸ்வினுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தடைகளை தாண்டி

தடைகளை தாண்டி

செம ஹேண்ட்ஸம் ஆக இருக்கும் அஸ்வினுக்கு சினிமா வாய்ப்பு அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லை. இயக்குநர் மணிரத்னம், கெளதம் மேனன் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் படங்களில் நடிக்க வேண்டும் என்று பெருமுயற்சி மேற்கொண்டார் அஸ்வின். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு காதல் ஒன்று கண்டேன் குறும்படத்தில் நடித்த அஸ்வினுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

லாஸ்லியாவுடன்

லாஸ்லியாவுடன்

குறும்படங்கள், விளம்பரப் படங்கள் என கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி வந்தார் நடிகர் அஸ்வின். பிக் பாஸ் பிரபலமும் நடிகையுமான லாஸ்லியா நடிப்பில் வெளியான பிளெஸ்ஸோ சோப்பு விளம்பரத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அசத்தி இருந்தார் அஸ்வின்.

ஹேப்பி பர்த்டே மாப்பிள்ளை

ஹேப்பி பர்த்டே மாப்பிள்ளை

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் சொந்தங்களாகவே மாறிய புகழ், அஸ்வினின் பிறந்தநாளை முன்னிட்டு ஹேப்பி பர்த்டே மாப்பிள்ளை என வாழ்த்தி உள்ளார். ஷிவாங்கியை தங்கச்சி எனக் கூறி வரும் புகழ் அஸ்வினை மாப்பிள்ளை என வாழ்த்தியுள்ளது ஷிவாங்கி மற்றும் அஸ்வின் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது.

குட்டி பட்டாஸ் ஹீரோயின்

குட்டி பட்டாஸ் ஹீரோயின்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொடர்ந்து சமீபத்தில் வெளியான குட்டி பட்டாஸ் ஆல்பம் பாடல் அஸ்வினுக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. அந்த பாடலில் அஸ்வினுடன் இணைந்து நடனமாடிய 'பிகில்' சிங்கப்பெண் ரெபா மோனிகா ஜான், தனது ட்விட்டர் பக்கத்தில் மறக்காமல் நடிகர் அஸ்வினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

இது ஆரம்பம் தான்

இது ஆரம்பம் தான்

நல்ல ஆரோக்கியம், அமைதி, மகிழ்ச்சி பொங்க வாழ வாழ்த்துக்கள் அஸ்வின். குட்டி பட்டாஸ் எல்லாம் ஆரம்ப வெற்றி தான். இதே போல ஏகப்பட்ட வெற்றிகள் உங்களுக்கு தினம் தினம் வரும் என்பதில் சந்தேகமே இல்லை. எப்பவுமே ஹேப்பியா இருங்க என நடிகை ரெபா மோனிகா ஜான் வாழ்த்தி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X