கள்ளக்காதலை நியாயப்படுத்துதா குட்டி ஸ்டோரி.. ட்ரெயிலர் முழுக்க அந்த மாதிரி வசனங்களே இருக்கே!

சென்னை: விஜய் சேதுபதி, அமலா பால் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள குட்டி ஸ்டோரி படத்தின் ட்ரெயிலர் சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களான கௌதம் வாசுதேவ் மேனன், ஏஎல் விஜய், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி ஆகிய நான்கு இயக்குநர்கள் இணைந்து இயக்கியுள்ள படம் குட்டி ஸ்டோரி.

இதில் விஜய் சேதுபதி, அமலா பால், அதிதி பாலன், மேகா ஆகாஷ், சாக்ஷி அகர்வால், சங்கீதா, ரோபோ ஷங்கர் என பலர் நடித்துள்ளனர்.

காதல் காட்சிகள்

காதல் காட்சிகள்

இந்த ஆந்தாலஜி படமான இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. அதில் முழுக்க முழுக்க காதல் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. விஜய் சேதுபதி திருமணமாகி குழந்தைகளுடன் இருந்தாலும், அதிதி பாலனுடன் தொடர்பில் இருக்கிறார்.

என் பொண்டாட்டியை பிடிக்குமா?

என் பொண்டாட்டியை பிடிக்குமா?

அதனைப்போலவே அமலாபாலும் திருமணமான ஆணுடன் நெருக்கமாக உள்ளார். அதிதி பாலன், உனக்கு என்னை பிடிக்குமா என் பொண்டாட்டியை பிடிக்குமா என்று கேட்கும் கேள்வி மிரள வைக்கிறது.

கம்ப்ளீட் கள்ளக்காதல்

கம்ப்ளீட் கள்ளக்காதல்

இதேபோல் அமலா பால் உனக்கு கேர்ள் ஃபிரண்ட் இருந்தும் என்னை ஏன் கிஸ் பண்ணினாய் என்ற கேள்வியும் இவை கம்ப்ளீட் கள்ளக்காதல் என்பதை உணர்த்துகிறது. மேலும் படுக்கையறை காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

கள்ளக்காதலை

கள்ளக்காதலை

நான்கு கதைகளுமே வித்தியாசமான காதல் கதை என்பது ட்ரெயிலரில் தெரிகிறது. ட்ரெயிலரை பார்த்த ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் பலரும் குட்டி ஸ்டோரி படம் கள்ளக்காதலை நியாயப்படுத்துகிறதா என கேட்டு வருகின்றனர்.

விஜய் சேதுபதி வித்தியாசம்

விஜய் சேதுபதி வித்தியாசம்

குட்டி ஸ்டோரி ட்ரெய்லரை பார்த்த இந்த நெட்டிசன், விஜய் சேதுபதி வித்தியாசமாக தெரிகிறார். அதேநேரத்தில் லைட்டாக ரோபோ ஷங்கர் போன்றும் தெரிகிறார் என்றும் பதிவிட்டுள்ளார்.

அதுக்குன்னு இப்படியா?

அதுக்குன்னு இப்படியா?

குட்டி ஸ்டோரி ட்ரெயிலரை பார்த்த இந்த நெட்டிசன், விஜய் சேதுபதி பேசும், தண்டணை கொடுக்கலாம் அதுக்குன்னு இப்டியா.. என்ற டயலாக்கை பதிவிட்டுள்ளார்.

அசால்டா சுத்திட்டு இருக்காப்ல

அசால்டா சுத்திட்டு இருக்காப்ல

ட்ரெயிலரை பார்த்த இந்த நெட்டிசன், பவானின்னு மாஸா ஒரு வில்லன் ரோல் பண்ணிட்டு அப்படியே தெலுங்குல சாதிவெறிபிடிச்ச வில்லனா ஹீரோயினோட அப்பாவா நடிச்சிட்டு அப்படியே அதேலுக்கோட தமிழ்ல லவ் (லிவிங்டுகெதர்) வாழ்ற கேரக்டர்..என்ன கேரக்டர் கொடுத்தாலும் நடிப்பன்டா நானு என்று அசால்டா சுத்திட்டு இருக்காப்ல என விஜய் சேதுபதியை புகழ்ந்துள்ளார்.

ரொம்ப அழகா இருக்கீங்க..

ரொம்ப அழகா இருக்கீங்க..

குட்டி ஸ்டோரி படத்தின் ட்ரெயிலரில் அதிதி பாலனின் பர்ஃபாமன்ஸை பார்த்த இந்த நெட்டிசன், எப்பா.. அதிதி பாலன் என் இதயத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.. குட்டி ஸ்டோரியில் ரொம்ப அழகா இருக்கீங்க.. என்று பதிவிட்டுள்ளார்.

எதிர்நோக்கியிருக்கிறோம்

எதிர்நோக்கியிருக்கிறோம்

குட்டி ஸ்டோரி படத்தின் ட்ரெயிலரை பார்த்த இந்த நெட்டிசன், நான்கு இயக்குநர்களின் டச்சை பார்த்தால் கே பாலச்சந்தர் சாரின் பிளாட்டை போன்று உள்ளது. இசை நன்றாக உள்ளது. எதிர்நோக்கியிருக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X