குட்டி தல ஆத்விக்குக்கு 6 வயசாகிடுச்சு.. போஸ்டர், டிரெண்டிங் என தெறிக்கவிடும் அஜித் ரசிகர்கள்!
சென்னை: தல அஜித்தை எப்படி கொண்டாடுகிறார்களோ அதே அளவுக்குத் தான் நடிகர் அஜித்தின் குழந்தைகளையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அஜித், ஷாலினி தம்பதியின் மகனான ஆத்விக் இன்று தனது 6வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
#HBDPrinceAadvikAJITH என்கிற ஹாஷ்டேக்கை தல ரசிகர்கள் டிரெண்ட் செய்து வாழ்த்தி வருகின்றனர்.

தல ஃபேமிலி
அமர்க்களம் படத்தில் அஜித் மற்றும் ஷாலினி இணைந்து நடித்த போது இருவருக்குள்ளும் காதல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து 2000ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அனோஷ்கா மற்றும் ஆத்விக் என இரு குழந்தைகள் உள்ளனர்.

குட்டி தல
தல அஜித்தின் மகனான ஆத்விக் கடந்த 2015ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி பிறந்தார். இன்று அவர் தனது 6வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ஆண்டுதோறும் மகன் ஆத்விக்கின் பிறந்தநாளை நடிகர் அஜித் குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடுவது வழக்கம். அதன் புகைப்படங்கள் வெளியான அடுத்த நொடியே டிரெண்டாகி விடும்.

வாழ்த்தும் ரசிகர்கள்
#HBDPrinceAadvikAJITH எனும் ஹாஷ்டேக்கை போட்டு தல ரசிகர்கள் குட்டி தல ஆத்விக்கின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். சமீபத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் அம்மா ஷாலினியுடன் ஆத்விக் இருக்கும் போட்டோ வைரலானது. அந்த புகைப்படத்தை தற்போது அஜித் ரசிகர்கள் மீண்டும் டிரெண்ட் செய்து வாழ்த்தி வருகின்றனர்.

வைரலாகும் போஸ்டர்
"மார்ச் 2 பிறந்தநாள் காணும் எங்கள் குட்டி தலயின் அழகுக்கு முன்னால் அந்த ஆண்டவனும் ஆயுட்கால அடிமையே" என ஆத்விக்கை வர்ணித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மதுரை அஜித் ரசிகர்கள் இந்த போஸ்டரை ஒட்டி உள்ளனர்.

நற்பணி மன்றம் சார்பாக
நடிகர் அஜித் தனக்கென்று எந்தவொரு ரசிகர் மன்றமும் வேண்டாம் என அறிவித்த நிலையிலும், அஜித் பெயரில் அவரது ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் நற்பணி மன்றங்களை நடத்தி வருகின்றனர். ஆத்விக் பிறந்தநாளை முன்னிட்டு, அன்னதானம், முதியோர் இல்லங்களில் கேக் வெட்டி கொண்டாடுதல் உள்ளிட்ட நற்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விஜய் ரசிகர்கள் வாழ்த்து
தல ரசிகர்கள் மட்டுமின்றி தளபதி ரசிகர்களும் குட்டி தல ஆத்விக்கை வாழ்த்தி வருகின்றனர். தொழில் போட்டியை தவிர இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதை பல மேடைகளில் அவர்களே கூறியுள்ளனர். அதே போலத்தான் தல - தளபதி ரசிகர்கள் திரைப்படம் சார்ந்து சண்டை போட்டாலும், குடும்பம் சார்ந்து சண்டையை தவிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

500 நாள் ஆகிடுச்சு
பிப்ரவரி இறுதியிலாவது வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அறிவிப்பு தேதி வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றம் தான். ஆத்விக்கின் பிறந்தநாளை முன்னிட்டு இன்றாவது அறிவிப்பார்களா? என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். வலிமை படத்திற்கு பூஜை போட்டு இன்றோடு 500 நாள் ஆகிடுச்சு என்றும் அஜித் ரசிகர்கள் போஸ்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











