»   »  வைரலான 'குட்டி தல'யின் லேட்டஸ்ட் போட்டோ: ட்விட்டரில் டிரெண்டான #AadvikAjith

வைரலான 'குட்டி தல'யின் லேட்டஸ்ட் போட்டோ: ட்விட்டரில் டிரெண்டான #AadvikAjith

Posted By:
Subscribe to Oneindia Tamil
இணையதளத்தில் ட்ரென்ட் ஆன ஆத்விக் அஜித் !!- வீடியோ

சென்னை: குட்டி தலயின் புதிய புகைப்படம் மற்றும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

அஜீத்தின் மனைவி ஷாலினி ஒரு பேட்மிண்டன் வீராங்கனை. இந்நிலையில் சென்னையில் நடந்த ப்ரீமியர் பேட்மிண்டன் லீக் போட்டியில் பி.வி. சிந்து நேற்று விளையாடினார்.

நேற்றைய போட்டியில் சிந்து உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான தாய் ஜூ இங்கை தோற்கடித்தார்.

சென்னை

சென்னை

சிந்து சென்னை ஸ்மாஷர்ஸ் அணி சார்பில் விளையாடி வெற்றி பெற்றார். தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய் பிரபாகர் தான் சென்னை ஸ்மாஷர்ஸ் அணியின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டி

சிந்து விளையாடிய போட்டியை காண ஷாலினி தனது மகன் ஆத்விக்குடன் ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு வந்திருந்தார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

புகைப்படம்

ஷாலினி பேட்மிண்டன் போட்டியை காண வந்த இடத்தில் குட்டி தலயுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ரசிகர்கள்

முதலில் பள்ளியில் அஜீத்துடன் ஆத்விக் இருந்த புகைப்படம் தற்போது ஷாலினியுடன் இருக்கும் புகைப்படம் வெளியானதில் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். #AadvikAjith என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் சென்னை அளவில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

English summary
Picture of Aadvik Ajith with mother Shalini has gone viral on social media. Shalini came to watch PV Sindhu on the fied in the PBL held in Jawaharlal Nehru indoor stadium in Chennai on sunday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X