அது என்ன 'குட்டித்தல'... விக்னேஷ் சிவன் போட்ட ட்வீட்டுக்கு என்ன அர்த்தம்

சென்னை : டைரக்டர் விக்னேஷ் சிவன் குட்டித்தல என ட்வீட் செய்துள்ளதால், ஒருவேளை அந்த தகவல் உண்மை தானோ என ரசிகர்கள் சந்தேகம் எழுப்பி வருகின்றனர். இத்தனை நாள் இல்லாமல் விக்னேஷ் சிவன் இப்படி ட்வீட் போட்டதற்கு அது தான் காரணமா என கேட்க துவங்கி விட்டனர்.

கடந்த சில நாட்களாகவே மீடியாக்களில் விக்னேஷ் சிவன், நயன்தாரா பற்றிய செய்திகள் தான் செம டிரெண்டாகி வருகிறது. டைரக்டர், தயாரிப்பாளர் என பிஸியாக இருக்கும் விக்னேஷ் சிவன், சமீபத்தில் பாடலாசிரியராகவும் அவதாரம் எடுத்துள்ளார். அஜித் நடித்த வலிமை படத்தில் இவர் எழுதிய நாங்க வேற மாரி, அம்மா சென்டிமென்ட் ஆகிய பாடல்களும் செம ஹிட் ஆகி உள்ளன.

கோயில் கோயிலாக செல்லும் நயன்–விக்கி

கோயில் கோயிலாக செல்லும் நயன்–விக்கி

சினிமாவை தாண்டி நயன்தாரா-விக்னேஷ் சிவன் தனிப்பட்ட வாழ்க்கை மீதான ஆர்வம் தான் அனைவரிடமும் அதிகமாக காணப்படுகிறது. முன்பெல்லாம் வெளிநாடுகளுக்கு சென்று வந்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி, சமீப காலமாக அடிக்கடி கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர். சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோயிலை தொடர்ந்து காளிகாம்பாள் கோயிலுக்கும் இருவரும் ஜோடியாக சென்று வழிபட்டனர். இந்த போட்டோக்கள் செம வைரலாகின.

 கல்யாணம் ஆகிடுச்சா

கல்யாணம் ஆகிடுச்சா

காளிகாம்பாள் கோயிலில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும், புதிய சென்னை மேயராக பொறுப்பேற்றுள்ள பிரியா ராஜனை சந்தித்ததை விட பரபரப்பாக பேசப்பட்டது நயன்தாரா நெற்றியில் வைத்திருந்த குங்குமம் தான். இதை வைத்து இவர்களுக்கு ரகசியமாக கல்யாணமே முடிந்து விட்டதாக தகவல் பரவியதால், இந்த போட்டோ செம வைரலானது. ஆனால் இது பற்றி விக்னேஷ் சிவனோ, நயன்தாராவோ இதுவரை வாய்திறக்கவில்லை.

ஏகே 62 டைரக்டர் இவரா

ஏகே 62 டைரக்டர் இவரா

இதற்கிடையில் அஜித்தின் 62வது படமான ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாகவும், இதில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், அஜித்தின் பிறந்தநாளான மே 1 ம் தேதி இந்த படம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாகவும், அக்டோபர் மாதம் இந்த படத்தின் ஷுட்டிங்கை துவக்கி, 2023ம் ஆண்டு தீபாளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.

எதுக்கு இந்த ட்வீட்

எதுக்கு இந்த ட்வீட்

ஆனால் ஏகே 62 பற்றிய தகவல் வெறும் வதந்தி என கூறப்பட்டது. இந்நிலையில் இந்த தகவல் உண்மை தான் என்பதை போல், குட்டி பைக்கை முறைத்து பார்த்து கொண்டிருக்கும் போட்டோவில், இனி தல போல வருமா என்றெல்லாம் சொல்ல முடியாது. அதுதான் வந்துட்டார் ல குட்டி தல என கேப்ஷன் பதிவிடப்பட்டுள்ளது. இதை தான் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். அப்போ ஏகே 62 டைரக்டர் விக்னேஷ் சிவன் தான் என்பது உண்மை தான் போல என கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X