விஜய் இனி நடிக்க மாட்டாரா?.. ஏன்னு சொல்லு.. கலங்கும் குட்டி ரசிகர்.. தீயாக பரவும் வீடியோ!

சென்னை: நடிகர் விஜய் ஏற்கனவே கமிட்டான படத்தை முடித்துவிட்டு அதன் பின்னர் முழுநேர அரசியலில் ஈடுபடப் போவதாகவும் சினிமாவில் இனி நடிக்கப் போவதில்லை என்றும் அறிவித்திருப்பது அவரது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இளம் ரசிகர்கள் மட்டுமின்றி, பல குழந்தைகளின் ஃபேவரைட் ஆன நடிகர் விஜய் சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பது குழந்தைகளையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் விஜய் இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டாரா என அம்மா சொல்வதை கேட்டுக் கண்கள் கலங்கும் குட்டி சிறுவனின் வீடியோ ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகிறது. நடிகர் விஜய் அரசியலுக்கு சென்றாலும் வருஷத்துக்கு ஒரு படமாவது ரசிகர்களுக்காக நடிக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Kutty Vijay fan cried after knowing Vijay wont act soon

அரசியல் தொழில் அல்ல: ”என்னை பொறுத்தவரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல. அது ஒரு புனிதமான மக்கள் பணி. அரசியலின் உயரம் மட்டுமல்ல, அதன் நீள அகலத்தையும் அறிந்து கொள்ள, இம் முன்னோர் பலரிடமிருந்து பாடங்களை படித்து நீண்ட காலமாக என்னை அதற்கு தயார்படுத்தி, மனதளவில் பக்குவப்படுத்திக் கொண்டு வருகிறேன். அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக பொருத்திக் கொள்ளவே விரும்புகிறேன். சார்பில், நான் ஏற்கனவே ஒப்புக் கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சிப் பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்து விட்டு முழுமையாக மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன்” என தெளிவாக தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் மற்றும் தளபதி 69 படத்தை முடித்து விட்டு விஜய் சினிமாவில் இருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார்.

கலங்கும் குட்டி ரசிகர்கள்: தளபதி விஜய் இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டாராம் என தனது மகனுக்கு சிறுவன் ஒருவனின் அம்மா சொல்ல, ”ஏன் நடிக்க மாட்டாரு, என்ன ஆச்சு” என அந்த சிறுவன் கேட்க, ஆமாம் அவரே சொல்லிட்டாரு, இனிமேல் நடிக்க மாட்டாராம். விஜய் படம்லாம் இனி வராது, அவரோட பாட்டுக்கு எல்லாம் டான்ஸ் ஆட முடியாது என சொல்ல, அந்த குட்டி ரசிகர் கலங்கும் வீடியோ இணையத்தில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இந்த குழந்தையை போல தமிழ்நாட்டில் உள்ள பல குழந்தை ரசிகர்கள் விஜய் நடிக்க மாட்டாரா என்கிற செய்தியை கேட்டு சோகமடைந்துள்ளனர்.

ரசிகர்கள் கோரிக்கை: வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தும் என்றும் தளபதியின் கடைசி படம் அனைத்து மக்களையும் கவரக்கூடிய பிரம்மாண்ட படமாக வரும் என்றும் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க அண்ணா நீங்க அரசியல் போனாலும் சினிமா ரசிகர்களை மறந்துடாதீங்க உங்க படங்களை பார்த்து தான் வளர்ந்தோம் என பல ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X