நான்கு காதல் கதைகள்.. கொஞ்சம் கள்ளக்காதல்.. வெளியானது குட்டி ஸ்டோரி.. தெறிக்கும் டிவிட்டர்!

Oசென்னை: குட்டி ஸ்டோரி படம் வெளியாகியுள்ள நிலையில் டிவிட்டரில் #KuttyStory என்ற ஹேஷ்டேக் ட்ரென்டாகி வருகிறது.

Recommended Video

Kutty Story Audience Opinion | Vijay Sethupathi, Gautham Menon

ஒரே படத்தில் வெவ்வேறு கதைகளை சொல்லும் ஆந்தாலஜி படங்கள் வருவது தமிழ் சினிமாவில் தற்போது அதிகரித்துள்ளது.

சில்லுக்கருப்பட்டி, பாவக்கதைகள் தொடர்ந்து இன்று குட்டி ஸ்டோரி ஆந்தாலஜி படம் வெளியாகியுள்ளது.

நான்கு குறும்படங்கள்

நான்கு குறும்படங்கள்

இயக்குநர்கள் கவுதம் மேனன், ஏஎல் விஜய், வெங்கட் பிரபு மற்றும் நலன் குமாரசாமி ஆகியோர் இணைந்து இப்படத்தை இயக்கியுள்ளனர். ஒவ்வொருவரும் ஒரு காதல் கதையை மையப்படுத்தி நான்கு குறும்படங்களாக இந்தப் படத்தை உருவாக்கியுள்ளனர்.

எதிர்பாரா முத்தம்

எதிர்பாரா முத்தம்

இதில் கவுதம் மேனன் இயக்கியுள்ள படத்திற்கு எதிர்பாரா முத்தம் என பெயரிடப்பட்டுள்ளது. இதில் கவுதம் மேனன், அமலா பால், வினோத் கிஷன் மற்றும் ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

காதலுக்கும் நட்புக்கும்

காதலுக்கும் நட்புக்கும்

கவுதம் மேனனின் இளமை பருவ தோற்றத்தில் வினோத் கிஷன் நடித்துள்ளார். காதலுக்கும் நட்புக்கும் இடையேயான வித்தியாசத்தை கூறும் வகையில் உருவாக்கியுள்ளார் கவுதம் மேனன்.

அவனும் நானும்..

அவனும் நானும்..

அடுத்து ஏஎல் விஜய் இயக்கியுள்ள படம் அவனும் நானும். இதில் அமிதாஷ் பிரதான், மேகா ஆகாஷ் ஆகியோர் நடித்துள்ளனர். காமத்தில் முடியும் காதல் அதனை ஒட்டிய சம்பவங்களை சொல்லும் படமாக இந்த படம் காட்சியாக்கப்பட்டுள்ளது.

லோகம்

லோகம்

அடுத்து வெங்கட் பிரபு லோகம் என்ற டைட்டிலில் இயக்கியுள்ள படத்தில் வருண், சங்கீதா, சாக்ஷி, லுத்புதீன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதில் வீடியோ கேமை வைத்தே ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான காதலை சொல்லியிருக்கிறார் வெங்கட் பிரபு.

ஆடல் பாடல்

ஆடல் பாடல்

அடுத்து இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியிருக்கும் படம் ஆடல் பாடல். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, அதிதி பாலன், லீடிங் ரோலில் நடித்துள்ளனர். இதில் கொஞ்சம் கள்ளக்காதலையும் கலந்து விட்டுள்ளனர்.

ஹேஷ்டேக் ட்ரென்டிங்

குட்டி ஸ்டோரி படம் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் #KuttyStory என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்து வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரென்டிங்கில் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X