கூழாங்கல் திரைப்படத்திற்கு கிடைத்த மற்றுமொரு அங்கீகாரம் !

சென்னை : நியூடைரக்டர்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படமாக கூழாங்கல் தேர்வாகியுள்ளது.

படக்குழுவுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இது கூழாங்கல் திரைப்படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக கருதப்படுகிறது.

விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன்

கோலிவுட்டின் மிக பிரபலமான காதல் ஜோடியாக வலம் வருபவர்கள் இயக்குனர் விக்னேஷ் சிவன், லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா ஜோடி தான். விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடி தான் படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் காதலிக்க தொடங்கிவிட்டனர்.

தயாரிப்பு நிறுவனம்

தயாரிப்பு நிறுவனம்

இவர்கள் இருவரும் ரவுடி பேபி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவக்கி, பல வெற்றிப்படங்களை தயாரித்து வருகின்றனர். இவர்கள் தயாரித்த பல திரைப்படங்கள் மாபெரும் வெற்றிப்பெற்ற நிலையில், அறிமுக இயக்குனர் பி.எஸ் வினோத் ராஜ் இயக்கிய கூழாங்கல் படத்தின் தயாரிப்பு உரிமையை பெற்றனர். இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார்.

டைகர் பிரிவில் போட்டி

டைகர் பிரிவில் போட்டி

நெதர்லாந்து நாட்டில்நடைபெற்ற ரோட்டர்டாம்சர்வதேச திரைப்படவிழாவில் டைகர் பிரிவுக்கு இப்படம் போட்டியிட்டது. இந்த விழாவிற்கு நடிகை நயன்தாரா பாரம்பரிய உடையான சேலையும், விக்னேஷ் சிவன் வேஷ்டியிலும், படக்குழுவினர் அனைவரும் பாரம்பரிய உடையில் இருந்தனர். இந்தியாவிலிருந்துதேர்வான ஒரே படம்கூழாங்கல் ஆகும்.

சிறந்த திரைப்படமாக தேர்வு

சிறந்த திரைப்படமாக தேர்வு

இந்நிலையில், நியூயார்க்கில் நீயூ டைரக்டர்ஸ் நீயூ திரைப்பட விழாவில் கூழாங்கல் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கு, பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது கூழாங்கல் திரைப்படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக கருதப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X