என்னுடைய படத்தில் நடிப்பீர்களா? ட்விட்டரில் வெளிப்படையாக கேட்ட கே.வி ஆனந்த் !

சென்னை : பொதுவாக இயக்குனர்களிடம் நடிகர்கள் வாய்ப்பு கேட்ட காலம் போய் தற்போது இயக்குனர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர்களை நீங்கள் என்னுடைய படத்தில் நடிப்பீர்களா என வெளிப்படையாக கேட்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Recommended Video

மீண்டும் கேவி ஆனந்துடன் இணையும் பிரபல நடிகர்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!- Filmibeat Tamil

முன்னணி நடிகர்களை வைத்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்த கே.வி ஆனந்த் பல்வேறு பிரபலமான படங்களுக்கு ஒளிப்பதிவாளராகவும் இருந்துள்ளார்.

ஒளிப்பதிவாளராகவும் இயக்குனராகவும் இருந்த கே.வி ஆனந்த் தற்பொழுது வளர்ந்து வரும் இயக்குனர் ஒருவரை தன்னுடைய படத்தில் நடிப்பீர்களா என வெளிப்படையாக ட்விட்டர் பக்கத்தில் கேட்டுள்ளார்.

ஆச்சரியப்படுத்தும் கதை

ஆச்சரியப்படுத்தும் கதை

தன்னுடைய ஒவ்வொரு படங்களின் மூலமும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் கதை களங்களுடனும், அதே சமயம் சமூக சிந்தனையுடனும் திரைப்படங்களை எடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு மிகப்பெரிய பாதையை அமைத்துக் கொண்டவர் இயக்குனர் கே.வி ஆனந்த். ஒளிப்பதிவாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய இவர், தற்பொழுது தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

சிறிய கதாபாத்திரத்தில்

சிறிய கதாபாத்திரத்தில்

நம் அனைவருக்கும் இயக்குனராக பரிச்சயமான கே.வி ஆனந்த் பி சி ஸ்ரீராம் இயக்கி விக்ரம் நடித்திருந்த மீரா திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். தமிழில் காதல் தேசம், நேருக்கு நேர், முதல்வன், சிவாஜி உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ள கேவி ஆனந்த், மலையாளத்தில் மோகன்லால் நடித்த "தென்மாவின் கொம்பத்" படத்திற்கு ஒளிப்பதிவு செய்ததன் மூலம் திரைத்துறைக்கு ஒளிப்பதிவாளராக அறிமுகமானார்.

தேசிய விருது

தேசிய விருது

பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கிய மோகன்லால் நடித்திருந்த "தென்மாவின் கொம்பத்" திரைப்படம் வெளியாகி அந்த ஆண்டிலேயே மிகப்பெரிய வசூலை ஈட்டிய திரைப்படம் என்ற பெருமையை பெற்றது. மேலும் தான் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய முதல் படத்திலேயே சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதையும் கேவி ஆனந்த் பெற்றார்.

இயக்குனராக அவதாரம்

இயக்குனராக அவதாரம்

தேசிய விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை தனது அழகான ஒளிப்பதிவு கலையின் மூலம் பெற்ற கே வி ஆனந்த் தமிழில் இயக்குனராக கனா கண்டேன் திரைப்படத்தின் மூலம் அவதாரம் எடுத்தார். நடிகர் ஸ்ரீகாந்த் நடித்திருந்த இந்த திரைப்படம் வெளியாகி அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

ஆச்சரியமூட்டும் ஆக்சன்

ஆச்சரியமூட்டும் ஆக்சன்

இதைத்தொடர்ந்து தனது இரண்டாவது படமே நடிகர் சூர்யாவை வைத்து மிக பிரம்மாண்ட கதைக்களத்துடன் ஆச்சரியமூட்டும் ஆக்சன் காட்சிகளுடன் "அயன்" திரைப்படத்தை இயக்கி வெற்றி இயக்குனரின் பட்டியலில் இணைந்தார்.

போதைப் பொருள் கடத்தலை

போதைப் பொருள் கடத்தலை

இவ்வாறு கே வி ஆனந்த் மற்றும் சூர்யா இணைந்து பணியாற்றிய முதல் படமான "அயன்" சூர்யா அதுவரையிலும் நடிக்காத ஒரு ஸ்டைலிஷ் மூவியாக வெளியாகி சக்கைபோடு போட்டு வசூலை வாரி குவித்தது. போதைப் பொருள் கடத்தலை மையமாக கொண்டு உருவான இந்த திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி பல ரசிகர்களை இவர் பக்கம் இழுத்தது.

தன்னுடைய படத்தில் நடிப்பீர்களா

தன்னுடைய படத்தில் நடிப்பீர்களா

அயன் படத்தின் மூலம் தொடங்கிய சூர்யா கே.வி ஆனந்த் கூட்டணி இன்று வரை மாற்றான், காப்பான் என தொடர்ந்து கொண்டிருக்கிறது. தனது பிரம்மாண்டமான கதைகளின் மூலம் பல புதுமையான விஷயங்களை புகுத்தி அதில் சமூக அக்கறையும் கலந்து தான் இயக்கும் ஒவ்வொரு படங்களிலும் ரசிகர்களை கவர்ந்து வரும் கே வி ஆனந்த் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் ஒருவரை தன்னுடைய படத்தில் நடிப்பீர்களா என வெளிப்படையாக கேட்டுள்ளார்.

கலகலப்பாக ப்ரோமோ

கலகலப்பாக ப்ரோமோ

சிவகார்த்திகேயன் மற்றும் கோலமாவு கோகிலா புகழ் இயக்குனர் நெல்சன் இணைந்து பணியாற்றி வரும் டாக்டர் படத்தின் பாடல்கள் இசையமைப்பாளர் அனிருத்தின் இசையில் உருவாகி வருவதையொட்டி அதன் முதல் பாடல் "செல்லம்மா" ஓரிரு நாட்களுக்கு முன்பு வெளியானது. செல்லம்மா பாடல் வெளியிடுவதற்கு முன்பு அனிருத் சிவகார்த்திகேயன் மற்றும் நெல்சன் மூவரும் இணைந்து இந்த பாடலுக்கான ப்ரோமோவாக கலகலப்பாக ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டனர்.

பாடலுக்கான எதிர்பார்ப்பை

பாடலுக்கான எதிர்பார்ப்பை

முற்றிலும் காமெடி நிறைந்த இந்த ப்ரோமோ வீடியோ செல்லம்மா பாடலுக்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் எழுதி இருக்கும் செல்லம்மா பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அந்த ப்ரோமோ வீடியோவை பார்த்த கேவி ஆனந்த் இயக்குனர் நெல்சனின் இயல்பான நகைச்சுவை உணர்வை பார்த்து ரசித்ததோடு ட்விட்டர் பக்கத்தின் மூலம் தன்னுடைய படத்தில் நடிப்பீர்களா என நெல்சனை வெளிப்படையாக கேட்டுள்ளார்.

ரசிப்புத் தன்மைக்கு நன்றி

ரசிப்புத் தன்மைக்கு நன்றி

இந்தப் பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ந்து போயிருக்கும் நிலையில் சிலர் பதில் சொல்லி வரும் நிலையில், நெல்சனின் நண்பரும் நடிகருமான சிவகார்த்திகேயன் உங்களின் ரசிப்புத் தன்மைக்கு மிகவும் நன்றி என தனது நன்றியை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது

ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது

இந்நிலையில் இந்த பதிவை பார்த்த பலரும் இது கே.வி ஆனந்தின் உண்மையான ட்விட்டர் கணக்கு தானா என கேள்விகளை எழுப்பி வரும் நிலையில், சிவகார்த்திகேயனின் பதில் அந்த சந்தேகத்தை தற்போது போக்கி இது உண்மையான ட்விட்டர் கணக்கு தான் என நிரூபித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

நெல்சன் தகுதியானவர்தான்

நெல்சன் தகுதியானவர்தான்

பொதுவாக இயக்குனர்கள் தான் கதாநாயகர்களை தங்களது படங்களில் நடிக்க வைக்க ஆசைப்பட்டு வந்த நிலையில் தற்போது முதன்முறையாக அதுவும் வெளிப்படையாக ஒரு பிரம்மாண்ட இயக்குனர் வளர்ந்து வரும் இயக்குனரே தன்னுடைய படங்களில் நடிப்பீர்களா என கேட்டுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் சிலர் இந்த கேள்விக்கு நெல்சன் தகுதியானவர்தான் என சொல்லியும் வருகின்றனர். எனவே கூடிய விரைவில் கே.வி ஆனந்தின் இயக்கத்தில் நெல்சன் நடிப்பார் என இதன்மூலம் நமக்கு தெரியவருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X