twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மாற்றான் பட ஷூட்டிங்கிலே பார்த்தேன்.. வெட்டுக்கிளி அட்டகாசம்.. விளக்கமாக சொல்லும் கே.வி. ஆனந்த்!

    |

    சென்னை: மகாராஷ்ட்ரா, டெல்லி என வட மாநிலங்களை வாட்டி எடுக்கும் வெட்டுக்கிளி படையெடுப்பு குறித்து இயக்குநர் கே.வி. ஆனந்த் விளக்கி உள்ளார்.

    Recommended Video

    Locust வெட்டுக்கிளிகள் என்பது என்ன தெரியுமா? | Oneindia Tamil

    கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இன்னும் இந்தியா மீளாத நிலையில், அடுத்ததாக வெட்டுக்கிளி அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

    லட்சக்கணக்கான ஏக்கர் பயிர்கள், வெட்டுக்கிளியின் கோர பசிக்கு இரையாவதால், விவசாயிகள் வேதனையில் வாடி வருகின்றனர்.

    அதுக்கு எந்த தகவலையும் அனுப்பாதீங்க.. இன்ஸ்டா கணக்கை ஹேக் செய்த மர்மநபர்கள்.. பிரபல நடிகை அதிர்ச்சிஅதுக்கு எந்த தகவலையும் அனுப்பாதீங்க.. இன்ஸ்டா கணக்கை ஹேக் செய்த மர்மநபர்கள்.. பிரபல நடிகை அதிர்ச்சி

    காப்பான் படத்தில்

    காப்பான் படத்தில்

    சீலிஃபெரா எனும் வெட்டுக்கிளி வகை பூச்சு ஒன்று தஞ்சாவூர் விவசாய பயிர்களை அழிக்கும் காட்சி கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்த காப்பான் படத்தில் இடம்பெற்றிருக்கும். கடந்த ஆண்டு வெளியான அந்த படத்தையும் தற்போது நடைபெற்று வரும் (Locusts Attack) வெட்டுக்கிளி அட்டகாசத்தையும் ஒப்பிட்டு பேசி வருகின்றனர்.

    ஒவ்வொரு படத்திலும்

    ஒவ்வொரு படத்திலும்

    பிரபல ஒளிப்பதிவாளரான கே.வி. ஆனந்த், கனா கண்டேன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படத்தில் கடல் நீரை குடிநீராக்குவது பற்றியும், அயன் படத்தில் திருட்டு விசிடி, கள்ளக் கடத்தல் குறித்தும் விளாவரியாக எடுத்திருந்தார். மாற்றான் படத்தின் இரட்டை சகோதரர்கள் பிரச்சனை, காப்பான் படத்தில் பூச்சுகள் அட்டகாசத்தை எடுத்திருந்தார்.

    குவிகிறது பாராட்டு

    குவிகிறது பாராட்டு

    கடந்த ஆண்டு வெளியான காப்பான் படத்தை பார்த்த பலரும், இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு, லாஜிக்கே இல்லாம இப்படி பூச்சிகளை வைத்து அரசியல் நடப்பதாக அப்பட்டமாக எடுத்துள்ளாரே என கே.வி. ஆனந்தை பலரும் விமர்சனம் செய்திருந்தனர். எதிர்பார்த்த அளவுக்கு அந்த படம் ஓடவும் இல்லை. இந்நிலையில், தற்போது வெட்டுக்கிளி அட்டகாசத்தை பார்த்த பலரும் தற்போது கே.வி. ஆனந்தை பாராட்டி வருகின்றனர்.

    நாஸ்டர்டாம்லாம் இல்ல

    நாஸ்டர்டாம்லாம் இல்ல

    இந்நிலையில், இதுகுறித்து ஆன்லைன் போர்ட்டல் ஒன்றுக்கு இயக்குநர் கே.வி. ஆனந்த் பேட்டி அளித்துள்ளார். தற்போது எல்லோரும் தன்னை பாராட்டுவது வருத்தத்தைத் தான் கொடுக்கிறது. இது போன்ற இயற்கை பேரிடரில் இருந்து நாம் எப்படி தப்புவது என்பதை தான் யோசிக்க வேண்டும். எந்தவொரு கதையும் தானாக யோசிக்கவில்லை என்றும், செய்தித் தாள்களில் வருவது மற்றும் முன்னதாக நடந்த விசயங்களை தான் படமாக ஆக்குகிறேன் எனக் கூறியுள்ளார்.

    மாற்றான் ஷூட்டிங்கில்

    மாற்றான் ஷூட்டிங்கில்

    மடகாஸ்கரில் மாற்றான் படத்தின் ஷூட்டிங்கை எடுத்துக் கொண்டு இருந்த போது, வெட்டுக்கிளிகள் படையெடுப்பை நேரிலேயே பார்த்தேன். சுமார் 30 நிமிடங்கள் எங்கள் கார் அசையவே இல்லை. அதுகுறித்து ஓட்டுநரிடம் கேட்ட போது தான், ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவில் அடிக்கடி இதுபோன்ற வெட்டுக்கிளி படையெடுப்புகள் நிகழும் என்றார்.

    படித்தேன்

    படித்தேன்

    பின்னர், வெட்டுக்கிளி படையெடுப்பு குறித்து ஆழமாக படிக்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு நாட்டிலும் அந்த அந்த தட்பவெப்ப நிலைக்கு ஏற்றார்போல வெட்டுக்கிளிகளின் வீரியம் இருக்கும் என்றும், வெட்டுக்கிளிகள் போல பயிர்களை நாசம் செய்யும் பல வகையான பூச்சிகள் இருப்பதாகவும், அதில் ஒன்றான சீலிபெரா எனும் வகையைத்தான் காப்பான் படத்தில் வைத்தேன் என்றும் தெரிவித்தார்.

    இந்தியாவில்

    இந்தியாவில்

    இந்தியாவில் இதுபோன்ற அட்டகாசம் முதல் முறையல்ல, கடந்த 1903ம் ஆண்டு முதல் 1906ம் ஆண்டு வரை நடைபெற்றதற்கான சான்றுகள் இருக்கின்றன. குறிப்பாக மும்பை நகரில் தான் வெட்டுக்கிளி தாக்குதல் நடைபெற்றது. 30 ஆண்டுகளுக்கு முன்னதாகவும், இதுபோன்ற தாக்குதல் ஏற்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் இதுவரை இதுபோன்ற தாக்குதல் நடைபெறவில்லை என்றார்.

    English summary
    KV Anand already witnessed Locust attack during the shooting of Maattraan movie. While he doing the shooting at Madagascar he saw the locust attack, after that he studied lot about before making Kaappan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X