கொரோனாவால் மரணமடைந்த கேவி ஆனந்த்.. ஆம்புலன்ஸில் இருந்த உடல்.. கதறிய குடும்பத்தினர்.. உடல் தகனம்!

சென்னை: இயக்குநர் கேவி ஆனந்த் கொரோனாவால் மரணமடைந்தது உறுதியாகியுள்ளது.

Recommended Video

KV Anand -திற்கு நடந்தது என்ன? முழு விவரம் | #RIPKVAnand

ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான கேவி ஆனந்த் தமிழ் சினிமாவில் அயன், மாற்றான், அனேகன், கவன், காப்பான் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

கடைசியாக கேவி ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படம் வெளியானது. இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார் கேவி ஆனந்த்.

கடந்த 24ஆம் தேதி

கடந்த 24ஆம் தேதி

இன்று காலை சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. இயக்குநர் கேவி ஆனந்த் கொரோனா தொற்றால் உயிரிழந்தது உறுதியாகியுள்ளது. 24ஆம் தேதி உடல் சோர்வு, தொண்டை வலி காரணமாக தானே மருத்துவமனைக்கு சென்றுள்ளார் கேவி ஆனந்த்.

கொரோனா தொற்று உறுதி

கொரோனா தொற்று உறுதி

மருத்துவமனையில் அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதியானது. இதனை தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

மனைவி மகளுக்கும் கொரோனா

மனைவி மகளுக்கும் கொரோனா

கேவி ஆனந்தை தொடர்ந்து அவரது மனைவிக்கும் மகளுக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இதனால் அவர்கள் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர்.

இன்று மரணம்

இன்று மரணம்

நேற்று மருத்துவமனைக்கு சென்று கேவி ஆனந்தின் மனைவி மற்றும் மகள்கள் அவரை சந்தித்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டு கேவி ஆனந்த மரணமடைந்தார்.

உடல் ஒப்படைக்கப்படவில்லை

உடல் ஒப்படைக்கப்படவில்லை

கேவி ஆனந்த் கொரோனா தொற்றால் உயிரிழந்ததால் அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவில்லை. மருத்துவமனையில் இருந்து நேரடியாக பெசன்ட் நகர் மின் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

வீட்டின் முன்பு ஆம்புலன்ஸில்

வீட்டின் முன்பு ஆம்புலன்ஸில்

மின்மயானத்துக்கு கொண்டு செல்லப்படும் வழியில் சென்னை அடையாறில் உள்ள அவரது வீட்டின் முன்பு ஆம்புலன்ஸிலேயே அவரது உடல் வைக்கப்பட்டு இறுதியாக குடும்பத்தினருக்கு காட்டப்பட்டது. பிளாஸ்டிக் கவரால் பேக் செய்யப்பட்டு ஆம்புலன்ஸில் இருந்த கேவி ஆனந்தின் உடலை பார்த்த குடும்பத்தினர் கதறி அழுதனர்.

பெசன்ட்நகரில் தகனம்

பெசன்ட்நகரில் தகனம்

குடும்பத்தினரின் கண்ணீர் அஞ்சலிக்கு பிறகு பெசன்ட்நகர் மின்மயானத்தில் கேவி ஆனந்தின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு தகனம் செய்யப்பட்டுள்ளது. கேவி ஆனந்த் கொரோனா தொற்றால் மரணமடைந்திருப்பது தமிழ் சினிமாவை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X