கே வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கிறாரா சிவகார்த்திகேயன்?

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் இப்பொழுது அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் டான் படத்தில் நடித்து வருகிறார்.

நம்ம வீட்டுப் பிள்ளை வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு டாக்டர் அடுத்த மாதம் திரையில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் தற்போது கசிந்துள்ள தகவலின்படி முன்னணி இயக்குனர் கே வி ஆனந்த் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார்.

 வித்தியாசமாக யோசிக்கும்

வித்தியாசமாக யோசிக்கும்

பத்திரிக்கை நிருபராக இருந்து பின் எக்கச்சக்கமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய இயக்குனர் கேவி ஆனந்த் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருகிறார். மற்ற இயக்குனர்களிடம் இருந்து சற்று வித்தியாசமாகவே யோசிக்கும் இவரது திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றி பெறுவது மட்டுமல்லாமல் பாக்ஸ் ஆபீஸ்களிலும் கலக்கி வருகிறது.

திருப்புமுனை படமாக

திருப்புமுனை படமாக

கனா கண்டேன் மூலம் இயக்குனராக அறிமுகத்தை கொடுத்த இவர் அதன்பிறகு இயக்கிய அயன் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றதோடு சூர்யாவின் திரை வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து கே வி ஆனந்த் இயக்கிய மாற்றான்,கோ, அனேகன், கவன் மற்றும் காப்பான் என அனைத்தும் வெற்றி பட வரிசையில் இருந்தன.

சிவகார்த்திகேயன் நடிப்பார்

சிவகார்த்திகேயன் நடிப்பார்

இந்த நிலையில் அடுத்த படத்திற்காக புதிய கதையை தயார் செய்து வைத்திருக்கும் கே வி ஆனந்த், பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் இடம் தயாரிக்கும் ஒப்புதலைப் பெற்று உள்ளார் என கூறப்படுகிறது. வழக்கமான மசாலாக்கள் இல்லாமல் வித்தியாசமான கதையாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

அதிகாரபூர்வ அறிவிப்பு

அதிகாரபூர்வ அறிவிப்பு

நம்ம வீட்டுப் பிள்ளை மாபெரும் வெற்றி பெற்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நிலையில் அதைத் தொடர்ந்து டாக்டர் இப்பொழுது தயாராகி ரிலீசுக்கு காத்து கொண்டு இருக்கிறது. அதை தொடர்ந்து அயலான் படமும் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கிவரும் டான் படத்தின் படப்பிடிப்பு கோயமுத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்க இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் மிக விரைவிலேயே முடிய உள்ளது. டான் படத்தை முடித்த கையோடு கேவி ஆனந்த் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பார் என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது. இதைப்பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X