கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் பெயர் ‘அனேகன்’

சென்னை: 'மாற்றான்' படத்திற்குப் பிறாகு கே.வி.ஆனந்த் இயக்கும் புதிய படத்திற்கு 'அனேகன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் தனுஷ் கதாநாயகனாகவும், அமிரா என்ற மும்பைப் பெண் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். இப்படத்தை கல்பாத்தி எஸ்.அகோரம் வழங்கும் 'ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் தயாரிக்கிறது.

களவாணி, வாகை சூடவா, ஆரம்பம் படங்களில் பணியாற்றிய ஓம் பிரகாஷ், இந்த படத்தின் ஒளிப்பதிவை கவனிக்கிறார். கே.வி. ஆனந்தின் முந்தைய படங்களுக்கு பல ஹிட் பாடல்களை வழங்கிய ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திலும் இசையமைக்க உள்ளார்.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில்...

கே.வி.ஆனந்த் இயக்கத்தில்...

‘கனா கண்டேன்', ‘அயன்', ‘கோ', 'மாற்றான்' போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த் இயக்கும் புதிய படம் இது.

அனேகன்னா....

அனேகன்னா....

அனேகன் என்பது மாணிக்கவாசகரின் பாடலில் வரும் பிரபல வார்த்தையாகும். இதன் பொருள், 'ஒன்றானவன், உருவில் பலரானவன்' என்பதாகும்.

கார்த்திக்-தனுஷ் கூட்டணி...

கார்த்திக்-தனுஷ் கூட்டணி...

வெகு நாட்களுக்குப்பிறகு வெள்ளித்திரையில் தன் முத்திரையை மீண்டும் பதிக்க உள்ள நவரச நாயகன் கார்த்திக், இப்ப்டத்தில் தனுஷூடன் மிக முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார்.

புதுமுக நாயகி அமிரா...

புதுமுக நாயகி அமிரா...

மும்பைப் பெண் அமிரா, தனுஷூக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமாகும் படம் இது. இவர்களுடன் அதுல் குல்கர்னி, ஆசிஷ் வித்யார்த்தி, ஜெகன் போன்றவர்களும் இப்படத்தில் இருக்கிறார்கள்.

காதலும், காமெடியும்....

காதலும், காமெடியும்....

அனேகன் படப்பிடிப்பு நாளை பாண்டிச்சேரியில் தொடங்க இருக்கிறது. காதலும், நகைச்சுவையும், பொறிப்பறக்கும் சண்டைக்காட்சிகளும் பின்னிப்படர்ந்த கதை ‘அனேகன்' எனச் சொல்லப் படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X