கே வி ஆனந்தை காக்க வைத்த ஹாரிஸ் ஜெயராஜ்
பின்னணி இசைக்காக இயக்குநர்களைக் காக்க வைப்பதில் ஹாரிஸ் ஜெயராஜ் தன் இடத்தை யாருக்கும் விட்டுக் கொடுக்க விரும்புவதில்லை போலும்.
இதோ மீண்டும் ஒரு முறை, தனது ஆஸ்தான இயக்குநர் கே வி ஆனந்தைக் காக்க வைத்திருக்கிறார்.
தனுஷை வைத்து ஆனந்த் இயக்கும் அனேகன் படம், இப்போது காத்திருப்பது ஹாரிஸின் இசைக்காகத்தான்.

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அம்ரியா தஸ்தூர் என்ற புதுமுகம் நடித்திருக்கிறார். கார்த்திக் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இப்படத்துக்காக 6 பாடல்களுக்கு இசையமைத்துள்ள ஹாரிஸ், இன்னும் அதன் மாஸ்டர் காப்பியையே தரவில்லையாம். மாஸ்டர் காப்பி கொடுத்த பிறகுதான் பாடல் வெளியீட்டுத் தேதியை அறிவிக்க முடியும்.
இதைப்பற்றி கே.வி.ஆனந்த் குறிப்பிடும்போது, "ஹாரிஸ் தற்போது பாடல்களில் இறுதிகட்ட மிக்ஸிங்கில் ஈடுபட்டு வருகிறார். அவர் வேலையை முடித்தபின்பு ‘அனேகன்' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவின் தேதியை அறிவிக்க வேண்டும். இன்னும் பின்னணி இசை பாக்கியுள்ளது. அதுவரை உங்களை போல் நானும் ஹாரிஸுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்" என்றார் நாசூக்காக.


Click it and Unblock the Notifications











