Thalapathy 69: ஒன் லாஸ்ட் டைம்.. விஜய் ரசிகர்களை கதறவிட்ட கேவிஎன்.. தளபதி 69 அப்டேட் எப்போ?
சென்னை: கன்னட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில், முதல் படமே தளபதி விஜய்யின் படத்தை தயாரிக்க முன் வந்துள்ளது.
கேஜிஎஃப் ஹீரோ யஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் டாக்ஸிக் படத்தை தயாரித்து வரும் நிறுவனம் அடுத்ததாக தளபதி 69 படத்தை தயாரிக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது.

இன்று மாலை 5 மணிக்கு தளபதி 69 படத்தின் அப்டேட்டை வெளியிட்டு விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. தளபதி 69 படத்தை இயக்குநர் எச். வினோத் இயக்குகிறார். அனிருத் இந்த படத்துக்கு இசையமைக்கிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. நாளை செப்டம்பர் 14ம் தேதி 5 மணிக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.
தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்: கடந்த வாரம் வியாழக்கிழமை வெளியான கோட் திரைப்படம் இந்த வாரமும் வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் மிலாடி நபி விடுமுறை என பிக்காகி ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 400 முதல் 500 வரை பாக்ஸ் ஆபிஸில் வெங்கட் பிரபு இயக்கிய கோட் படம் வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 400 கோடி பட்ஜெட்டில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், சினேகா, மீனாட்சி சவுத்ரி, சிவகார்த்திகேயன், லைலா, ஏஐ மூலமாக கேப்டன் விஜயகாந்த் என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர்.
கடைசி படம்: தளபதி 69 படத்தின் அப்டேட் வந்ததை நினைத்து ரசிகர்கள் சந்தோஷப்படுவதா? அல்லது இதுதான் தளபதி விஜய்யின் கடைசி படம் என வருத்தப்படுவதா என ரொம்பவே மனக்கஷ்டத்தில் ஆழ்ந்துள்ளனர். கோட் படத்தை விட தளபதி 69 படத்தை வேறலெவலில் கொண்டாட வேண்டும் என்றும் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாற்ற வேண்டும் என விஜய் ரசிகர்கள் இப்பவே முடிவு செய்துள்ளனர். ஒன் லாஸ்ட் டைம் என கேவிஎன் தயாரிப்பு நிறுவனமே வெளியிட்டு விஜய் ரசிகர்களை கதற விட்டுள்ளது.
நாளை அறிவிப்பு: தளபதி விஜய்யின் தளபதி 69 படத்தின் இயக்குநர் மற்றும் இசையமைப்பாளர், படத்தின் தலைப்பு உள்ளிட்ட விஷயங்கள் இன்று மாலை 5 மணிக்கே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இத்தனை வருடங்களாக தியேட்டர் செலிபிரேஷன் விஜய் படங்களுக்கு எப்படி இருந்தது என்பதை வீடியோவாக வெளியிட்டு ரசிகர்களை கண்ணீர் மல்க ஃபீல் பண்ண வைத்து விட்டு நாளை மாலை அறிவிப்பு வெளியாகும் என கேவிஎன் அறிவித்துள்ளனர்.
வினோத் சம்பவம் எப்படி இருக்கும்?: சதுரங்க வேட்டை படத்தில் விஜய்யை கலாய்த்து விட்டார் எச். வினோத் என ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்தன. அடுத்து அஜித்தை வைத்து அவர் 3 படங்களை இயக்கும் போது கூட விஜய் ரசிகர்கள் எச். வினோத்துக்கு எதிராக ஏகப்பட்ட விமர்சனங்களையும் மோசமான ட்ரோல்களையும் அடுக்கினர். அஜித்துடன் எச். வினோத் இணைந்து ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு துணிவு படத்தை கொடுத்திருந்தார். ஆனால், அந்த படம் கூட பெரிதாக இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்கவில்லை. தளபதி 69 படத்தில் எச். வினோத் சம்பவம் எப்படி இருக்கும் என்பதை காத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











