தளபதி 69 தள்ளிப்போக வாய்ப்பே இல்லை.. தயாரிப்பு நிறுவனம் அதிரடியாக வெளியிட்ட அப்டேட்.. சம்பவம் உறுதி!

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 69 படம் இந்த ஆண்டு வெளியாகாது என்றும் அடுத்த ஆண்டு பொங்கலுக்குத்தான் ரிலீஸ் ஆகும் என பேச்சுக்கள் அடிபட்டு வரும் நிலையில், அதிரடியாக கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

கேஜிஎஃப் நடிகர் யஷ் நடித்து வரும் டாக்ஸிக் படத்தை தயாரித்து வரும் பிரபல கன்னட நிறுவனமான கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் தான் தளபதி 69 படத்தை தயாரித்து வருகிறது. சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு படங்களை இயக்கிய எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் டைட்டில் "நாளைய தீர்ப்பு" என்றும் விரைவில் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு தளபதி 69 படமே வெளியாகாது போன்ற வதந்திகள் ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தின.

vijay thalapathy 69 69

ஆனால், கொஞ்ச நேரம் கூட தனது ரசிகர்களை தவிக்க விடக்கூடாது என நினைக்கும் தளபதி விஜய் அதிரடியாக ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே வரும் குடியரசு தினத்துக்கு ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்கிற அறிவிப்பை வெளியிடுமாறு தயாரிப்பு நிறுவனத்துக்கு உத்தரவிட்ட நிலையில், தற்போது செம அப்டேட் வெளியாகி உள்ளது.

தளபதி 69 ஃபர்ஸ்ட் லுக்: கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் விஜய்யின் 69வது படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் பிரேமலு நடிகை மமிதா பைஜு நடித்து வருகிறார். மேலும், பாபி தியோல், பிரகாஷ் ராஜ், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். வரும் ஜனவரி 26ம் தேதி தளபதி 69 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டைட்டிலுடன் பக்காவாக வெளியாகும் என்கிற அறிவிப்பை தற்போது கேவிஎன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தள்ளிப்போக வாய்ப்பே இல்லை: 69 சதவீதம் தளபதி 69 படம் கம்ப்ளீட் ஆகியுள்ளதாகவும் வரும் குடியரசு தினத்தன்று ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு தீபாவளிக்குத்தான் தளபதி 69 படம் வெளியாகும் என்றும் தேவையில்லாத வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் விஜய் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். குடியரசு தினத்தன்று வெளியாகும் ஃபர்ஸ்ட் லுக்குடன் கண்டிப்பாக ரிலீஸ் தேதியும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களுக்காகவும் ரசிகர்களுக்காகவும்: நடிகர் விஜய் தவெக கட்சியை தொடங்கி மக்களுக்காக அரசியல் களத்தில் இறங்கியுள்ள நிலையில், அதே அளவிலான முக்கியத்துவத்தை தனது ரசிகர்களுக்காகவும் அவர் எப்போதுமே கொடுப்பார் என்று கூறுகின்றனர். தளபதி 69 படத்தின் படப்பிடிப்பை அவர் விரைவில் முடித்துவிடுவார் என்றும் தாமதம் ஆக வாய்ப்புகள் குறைவு என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X