Thalapathy 69 Cast Reveal: தளபதி 69 படத்தில் இந்த நடிகையா?.. ஹெச். வினோத் என்ன செய்ய காத்திருக்காறோ?
சென்னை: நடிகர் விஜய் தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை தெரிவித்தபோது தமிழ் சினிமாவில் இருந்து முழுவதுமாக ஒதுங்கப்போவதாக அறிவித்தார். இதனால் இவரது 69வது படம் இவரது கடைசிப் மாறிவிட்டது. இந்தப் படத்தினை ஹெச். வினோத் இயக்கவுள்ளார் என்ற தகவல் படக்குழு முன்னரே அறிவித்தது. மேலும் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதும், இந்தக் கதை நடிகர் கமல்ஹாசனுக்குச் சொன்ன கதை எனவும் கூறப்பட்டது.
மேலும் ஹெச் வினோத்துடன் கமல் இணைந்து உருவாவதாக இருந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் இதேபோல் கையில் தீப்பந்தத்துடன் வெளியிடப்பட்டது. இந்நிலையில் நேற்றில் இருந்து அதாவது, அக்டோபர் முதல் தேதியில் இருந்து, படத்தில் யாரெல்லாம் விஜய் உடன் நடிக்கின்றார்கள் என்ற, அறிவிப்பை வெளியிடப்போவதாக அறிவித்தனர். இந்நிலையில் படத்தில் நடிகை மமிதா பைஜு நடிப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் அதிக வணிகத்தைக் கொண்ட உள்ள நடிகர் என்றால் அது விஜய். இவரது படம் ரிலீஸ் ஆனாலே பாக்ஸ் ஆஃபீஸில் எதாவது சம்பவம் உறுதி எனக் கூறும் அளவிற்கு மாஸன கதாநாயகன். இவரை வைத்து படம் எடுத்தால் வெற்றியின் அளவுதான் முன்பின் இருக்குமே தவிர, வசூலில் தோல்வி என்பது கிடையவே கிடையாது என்ற நிலையை விஜய் எட்டி பல ஆண்டுகள் ஆகின்றது. அதேநேரத்தில் விஜய் தமிழ் சினிமா நடிகர்களிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உள்ளார். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான தி கோட் படத்திற்கு விஜய்யின் சம்பளம் ரூபாய் 200 கோடி என படத்தின் தயாரிப்பாளர் ஒரு பேட்டியில் ஒப்புக் கொண்டார்.

இப்படியான நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. மேலும், தயாரிப்பாளர்களுக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் ரசிகர்கள் தொடங்கி பல திரைப்பிரபலங்கள் பலரும், தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என விஜய்க்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் தொடர்ந்து விஜய் படங்களில் நடிப்பாரா என்பது அவருடைய கையில்தான் உள்ளது.

தளபதி 69: படத்தினை தயாரிப்பதன் மூலம் கே.வி. என் புரடெக்ஷன்ஸ் என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் தமிழில் காலடி எடுத்து வைக்கின்றது. இந்தத் தயாரிப்பு நிறுவனம்தான் அண்மையில் வெளியாகியுள்ள தேவாரா படத்தினை தயாரித்தது. படத்தின் தயாரிப்பு நிறுவனம், படத்தில் யாரெல்லாம் நடிக்கின்றார்கள் என்ற அறிவிப்பை தெரிவித்து வருகின்றது. இதன் அடிப்படையில் ஏற்கனவே, தளபதி 69 படத்தில் பாபி தயாள் மற்றும் நடிகை பூஜா ஹெக்டே ஆகியோர் நடிக்கின்றார் எனத் தெரிவிக்கப்பட்டது. இதில் பாபி தயாள் மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோர் சூர்யாவின் படங்களுக்குப் பின்னர் இதில் கமிட் ஆகியுள்ளனர். பாபி தயாள் சூர்யாவின் கங்குவா படத்தில் நடித்துள்ளார். பூஜா ஹெக்டே சூர்யாவின் 44வது படத்தில் நடித்து வருகின்றார்.

மமிதா பைஜு: இந்நிலையில் இன்று படக்குழு வெளியிட்ட முதல் அறிவிப்பில் படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார் என்ற தகவலை தெரிவித்தது. இரண்டாவது அறிவிப்பில் மமிதா பைஜு நடிக்கின்றார் என்ற தகவலை படக்குழு வெளிட்டுள்ளது. இந்த இரண்டு அறிவிப்புகளும் விஜய் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. பூஜா ஹெக்டே ஏற்கனவே விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார். பீஸ்ட் படம், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்கினார். படத்திற்கு அனிருத் இசை அமைத்தார். அனிருத்தின் இசையில், பீஸ்ட் படத்தில் இடம் பெற்ற அரபிக் குத்து பாடலுக்கு பூஜா ஹெக்டேவும் விஜய்யும் ஆடியது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
பிரமலு: மமிதா பைஜுவைப் பொறுத்தவரையில் பிரமலு என்ற படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் நன்கு பிரபலமானவர். இவரது நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம், நியூ ஜென். இந்தப் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இவர் தமிழில் இதுவரை நேரடியாக எந்தப் படங்களிலும் நடிக்கவில்லை. தளபதி 69 படத்தின் மூலம் தமிழில் நேரடியாக அறிமுகமாகவுள்ளார்.


Click it and Unblock the Notifications











