twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கன்னட மொழியிலும் வெளியாகுது RRR.. படத்தை தடை செய் என டிரெண்ட் ஆன உடனே வந்த மாஸ் அப்டேட்!

    |

    பெங்களூரு: கர்நாடகாவில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியாகிறது. ஆனால், கன்னட மொழியில் ஏன் வெளியாகவில்லை என்கிற கேள்வியுடன் BoycottRRRinKarnataka ஹாஷ்டேக்கை கன்னட இளைஞர்கள் டிரெண்ட் செய்தனர்.

    இந்நிலையில், ஆர்ஆர்ஆர் படத்தின் கர்நாடக வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ள கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் ரசிகர்களை அமைதி படுத்தும் வகையில் சூப்பர் அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

    கன்னட மொழியிலும் ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியாகும் என்பது தான் அந்த அறிவிப்பு.

    மாஸ்டர் படம் பற்றி ராஜமெளலி என்ன சொன்னாரு தெரியுமா? அனிருத்தை வெகுவாக பாராட்டிய RRR இயக்குநர்!மாஸ்டர் படம் பற்றி ராஜமெளலி என்ன சொன்னாரு தெரியுமா? அனிருத்தை வெகுவாக பாராட்டிய RRR இயக்குநர்!

    கன்னடர்கள் கண்டனம்

    கன்னடர்கள் கண்டனம்

    இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி உள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கூடாது என #BoycottRRRinKarnataka எனும் ஹாஷ்டேக்கை காலை முதலே இந்தியளவில் கன்னட ரசிகர்கள் டிரெண்ட் செய்து தெறிக்கவிட்டனர். கன்னட மொழியில் படம் வரவில்லை என்றால் கர்நாடகாவில் ரிலீஸ் செய்யக் கூடாது எனக் கூறியிருந்தனர்.

    பெருகிய ஆதரவு

    பெருகிய ஆதரவு

    கன்னட இளைஞர்களின் இந்த டிரெண்டிங்கிற்கு பல தரப்பில் இருந்து ஆதரவு பெருகி அந்த ஹாஷ்டேக் மிகப்பெரிய டிரெண்ட்டிங்கை உருவாக்கியது. கன்னட நடிகர்கள் தட்டிக் கேட்காத விஷயத்தை இளைஞர்கள் கேட்கின்றனரே என பலரும் பல ட்வீட்களை போட்டு படத்தை கர்நாடகாவில் வெளியிட வாங்கியுள்ள கேவிஎன் நிறுவனத்தை கழுவி ஊற்றி வந்தனர்.

    கன்னடத்திலும் ரிலீஸ்

    கன்னடத்திலும் ரிலீஸ்

    இந்த திடீர் டிரெண்டிங்கை பார்த்து மிரண்டு போன கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் தற்போது ஸ்பெஷல் அறிவிப்பு என ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், கன்னட மொழியிலும் ஆர்ஆர்ஆர் திரைப்படம் டப் ஆகி உள்ளதாகவும் கூடிய விரைவிலேயே கன்னட மொழியில் பல திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

    சொந்தக் குரலில் டப்பிங்

    சொந்தக் குரலில் டப்பிங்

    ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் பிரத்யேகமாக கன்னட மொழி கற்றுக் கொண்டு இந்த படத்திற்காக சொந்தக் குரலிலேயே டப்பிங் செய்துள்ளனர் என்றும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதற்கு மேல், இதை வைத்து கன்னட இளைஞர்கள் பிரச்சனை பண்ண வேண்டாம் என ஆர்ஆர்ஆர் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    English summary
    KVN productions announced that RRR will also be released in Kannada in Karnataka. This news makes Kannadigas very happy.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X