Vijay: யஷ் படத்தை தொடர்ந்து தளபதி 69 படத்தை தயாரிக்கும் நிறுவனம்.. விரைவில் அறிவிப்பு?

சென்னை: நடிகர் விஜயின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் இரு வாரங்களில் இந்த படத்தின் ஷூட்டிங் ஒட்டுமொத்தமாக நிறைவடையும் சூழலில் சில பேட்ச் ஒர்க் வேலைகளை இயக்குனர் வெங்கட் பிரபு மேற்கொண்டு வருகிறார். இந்த படத்தை அடுத்து தளபதி 69 படத்தில் இணைய உள்ளார் விஜய்.

இந்த படத்தின் அறிவிப்பு இந்த மாத இறுதியில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் ஹெச் வினோத் இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் தயாரிப்பு குறித்து அடுத்தடுத்து தினம் ஒரு தகவல் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் நடிகர் யஷ்ஷின் டாக்ஸிக் படத்தை தயாரித்து வரும் கேபிஎன் புரொடக்ஷன்ஸ் அடுத்ததாக தளபதி 69 படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

KVN productions going to produce Vijay s Thalapathy 69 movie it seems

நடிகர் விஜய்: நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இதன் இறுதி கட்ட சூட்டிங் தற்போது நடந்து வரும் சூழலில் இன்னும் இரு வாரங்களில் இந்த படத்தின் சூட்டிங் முழுவதுமாக நிறைவடையவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. படத்தின் சூட்டிங் சென்னையில் சில தினங்கள் நடத்தப்பட்ட சூழலில் தற்போது துபாயில் நடத்தப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 69 படத்தில் நடிக்க உள்ளார் விஜய். இது குறித்த அறிவிப்பு அவரது பிறந்த நாளை ஒட்டி வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தளபதி 69 படம்: இந்த மாதத்திலேயே படம் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்த படத்தை இயக்குனர் ஹெச் வினோத் இயக்க உள்ளது ஏறக்குறைய உறுதியாகி உள்ளது. ஆனால் படத்தை யார் தயாரிக்க உள்ளார்கள் என்பது குறித்து இன்னும் பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் யஷ்ஷின் டாக்சிக் படத்தை தயாரித்து வரும் கேபிஎன் நிறுவனம் அடுத்ததாக விஜய்யின் தளபதி 69 படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு?: இதனிடையே பேஷன் ஸ்டுடியோஸ் இந்த படத்தின் தயாரிப்பை முதல் காப்பி அடிப்படையில் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் மற்றும் நடிகர்கள் நடிகைகள் குறித்து முன்னதாகவே இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. படத்தின் சூட்டிங் அனேகமாக வரும் ஆகஸ்ட் மாதத்தில் துவங்க உள்ளதாகவும் படம் அடுத்த ஆண்டு சம்மர் வெளியீடாக ரிலீசாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது தளபதி 69 படம். அரசியல் ஜானரில் இந்த படம் உருவாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

செப்டம்பரில் ரிலீசாகும் கோட் படம்: இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் உள்ளது. இந்தப் படத்தை முடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலக உள்ளதாக முன்னதாக விஜய் அறிவித்துள்ளார். இதனிடையே விஜயின் இறுதி படமாக உருவாகவுள்ள தளபதி 69 படம் அவரது அரசியல் கேரியருக்கு பயன்படும் வகையில் அமையும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துவரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X