அடி தூள்! ஒரு மணி நேரத்தில் பல மில்லியன் பார்வைகளை கடந்த KVRK டீசர்!

சென்னை : விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பெரிய அளவில் எதிர்பார்ப்பில் இருக்கக்கூடிய படம் தான் காத்துவாக்குல ரெண்டு காதல்.

விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா, பிரபு போன்ற பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். விக்னேஷ் சிவன் நயன்தாராவின் சொந்த நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

நீண்ட நாட்களாக மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த படம் என்பதால், நேற்று வெளிவந்த இப்படத்தின் டீசர் வேற லெவல் ஹிட் அடித்துள்ளது.

அதிக எதிர்பார்ப்பு

அதிக எதிர்பார்ப்பு

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நீண்ட நாட்களாக மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகி இருக்கக்கூடிய படம் தான் காத்துவாக்குல ரெண்டு காதல்.

டீசரில் விஜய் சேதுபதி கடவுள் முருகனையும், பெருமாளையும் வணங்கி எல்லாரையும் காப்பாற்று பா என்று சொல்லி முடிக்கிறார். இந்த படத்தில் மூன்று பேர் கொண்ட கூட்டணியாக பல ரகளையான காமெடி காட்சிகள் ரசிகர்களை மிகவும் ஈர்த்து உள்ளது.

நானும் ரவுடி தான் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு அந்த படக்குழுவினர் இணைந்து உருவாக்கியுள்ள படம் தான் காத்துவாக்குல ரெண்டு காதல். விக்னேஷ் சிவன் நயன்தாராவின் சொந்த நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது என்பதால் பலவிதமான வியாபார யுக்திகளை கையாண்டு வருகின்றனர் .

வெற்றிக்கு தயாரான கூட்டணி

வெற்றிக்கு தயாரான கூட்டணி

காத்துவாக்குல 2 காதல் படத்தின் டீசர் நேற்று வெளியான நிலையில், இந்த டீசர் பற்றிய கருத்துக்களை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். இந்த படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தாவை காதலிக்கும் விஜய் சேதுபதி. வழக்கமான எதார்த்த நடிப்பாலும். நக்கலான பேச்சாலும் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

ஹிட்டுக்கு ரெடி

ஹிட்டுக்கு ரெடி

லாபம், துக்ளக் தர்பார், அனபெல் சேதுபதி என்று தொடர்ந்து பல தோல்விகளை தந்த நடிகர் விஜய் சேதுபதிக்கு இந்த படம் கண்டிப்பாக ஒரு ஹிட் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் மிரட்டும் விஜய்சேதுபதி இந்த படத்தில் இரண்டு நாயகிகளை காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இரண்டு நாயகிகள் அலப்பறை

இரண்டு நாயகிகள் அலப்பறை

காத்துவாக்குல இரண்டு காதல் படத்தில் நயன்தாரா கண்மணி கங்குலி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டீசரில் மக்களின் மனதை வென்ற மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பேசும் வசனங்கள் தனி ரகம் தான். இந்த படத்தின் டீசர் நேற்று வெளியான நிலையில் ஒரு மணி நேரத்திற்குள் பல மில்லியன் பார்வைகளை தொட்டது. இதுவே இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் நான் பிழை மற்றும் டூ டூ டூ பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X