'மீண்டும் வாய்ப்பு வேணும்னா, கரண்ஜோஹர் பார்ட்டிக்கு வாங்க'ன்னு கூப்பிட்டாங்க.. பிரபல நடிகை பகீர்!
மும்பை: சினிமாவில் மீண்டும் நடிக்க வேண்டும் என்றால் கரண் ஜோஹர் நடத்தும் பார்ட்டிக்கு வாருங்கள் என்று அழைத்ததாக பிரபல நடிகை பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.
நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கை விசாரித்து வருகிறது, போலீஸ். இந்த வழக்கு இப்போது போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக்கு சென்றிருக்கிறது.
இந்த வழக்கு விசாரணையில் நித்தம் புது புது தகவல்கள் வெளிவருகின்றன.

ரியா சக்கரவர்த்தி
பண மோசடி குறித்து, சுஷாந்த் சிங்கின் காதலி, நடிகை ரியா சக்கரவர்த்தியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவருடைய வாட்ஸப் உரையாடல்கள் தெரியவந்தன. அவருக்கும் போதைப் பொருள் விற்பனை செய்யும் கும்பலுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரும் அவர் சகோதரர் உள்பட சிலர் கைது செய்யப்பட்டனர்.

தீபிகா படுகோன்
சுஷாந்தின் திறன் மேலாளராக இருந்த ஜெயா சாஹா, க்வான் திறன் மேலாண்மை நிறுவனத்தை சேர்ந்த கரிஷ்மா ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் சில தகவல்கள் கிடைத்தன. இதில் பல பாலிவுட் நடிகைகளுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அதன்படி, நடிகைகள் தீபிகா படுகோன், சாரா அலிகான், ரகுல் பிரீத் சிங், ஷ்ரத்தா கபூர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி
ரகுல் பிரீத் சிங்கிடம் நேற்று நான்கு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இன்று நடிகை தீபிகா படுகோனிடம் விசாரணை நடக்கிறது. இதற்கிடையே, சினிமாவில் மீண்டும் நடிக்க வேண்டும் என்றால் கரண் ஜோஹர் நடத்தும் பார்ட்டிக்கு வாருங்கள் என்று க்வான் நிறுவனம் அழைத்ததாக நடிகை சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி, பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.

இயக்குனர் சேகர் கபூர்
இவர், தமிழில் சிவரஞ்சனி என்ற படத்தில் நடித்தவர். இந்தியில் கபி ஹான் கபி நா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். பிரபல இயக்குனர் சேகர் கபூரின் முன்னாள் மனைவி ஆவார். 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடிக்காமல் இருந்த இவர், கடந்த ஆண்டு ரோமியோ அக்பர் வால்டர் என்ற படத்தில் நடித்திருந்தார்.

கரண் ஜோஹர்
அவர் கூறும்போது, ஒரு ஏஜென்ட்டிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அந்த பெண், நீங்கள் ஏன் இன்னும் நடிக்காம இருக்கீங்க என்று கேட்டார். என் குழந்தை சின்ன பெண்ணா இருக்கிறார். பார்ப்போம் என்றேன். அந்தப் பெண், மீண்டும் வாய்ப்பு வாங்கறது ரொம்ப ஈசி. சில விஷயங்களை நீங்க பண்ணணும். கண்டிப்பா கரண் ஜோஹர் நடத்தும் பார்ட்டிகள்ல கலந்துகொள்ளணும் என்றார். இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications











