Don't Miss!
- News
ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டது அரசியல் பின் வாங்கலா? முதல்வர் மு.க ஸ்டாலின் பதில்
- Sports
உலக கிரிக்கெட் வரலாற்றில் புது முயற்சி.. பயிற்சியாளர் விசயத்தில் பாக். ஏற்பாடு.. ஆப்ரிடி எதிர்ப்பு
- Finance
அதானி குழுமத்திற்கு ஜாக்பாட் நியூஸ்.. அபுதாபி நிறுவனம் ரூ.3200 கோடி முதலீடு செய்ய திட்டம் !
- Lifestyle
February Horoscope 2023: பிப்ரவரி மாசம் இந்த ராசிக்காரங்க ரொம்ப கஷ்டப்பட போறாங்க.. உங்க ராசி இதுல இருக்கா?
- Automobiles
ஐஆர்சிடிசில பஸ் டிக்கெட் புக் பண்ணா இவ்வளவு லாபமா? எப்படி பண்ணணும் தெரியுமா?
- Technology
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் பிரபலம்.. முதலிடம் யாருக்குத் தெரியுமா? Forbes 2020 பட்டியல் இதோ!
சென்னை: உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் பட்டியலில் சர்வதேச சூப்பர் மாடலான கைலி ஜென்னர் முதலிடத்தை பிடித்துள்ளார்.
நடிகரும் மல்யுத்த வீரருமான டுவைன் 'ராக்' ஜான்சன் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
நீங்க
ஏன்
வந்தீங்க?
அதைத்தான்
நாங்களும்
கேட்கிறோம்..
கிளம்புங்க
அர்ச்சனா..
கடுப்பான
ரசிகர்கள்!
ஆண்டு தோறும் Forbes இந்த பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான பட்டியலில் எந்த எந்த பிரபலங்கள் இடம்பெற்றுள்ளனர். என்பதை பார்ப்போம்.

முதலிடம் யாருக்கு
சர்வதேச சூப்பர் மாடலான கைலி ஜென்னர் இந்த ஆண்டு உலகிலேயே அதிக சம்பளம் வாங்கிய பிரபலங்களின் Forbes பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். கிம் கர்தாஷியனின் சகோதரியான இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 203 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர் குறிப்பிடத்தக்கது.

எத்தனை கோடி சொத்து
மாடலிங், அழகு சாதன பொருட்கள், உள்ளாடைகள் என ஏகப்பட்ட தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் இவருக்கு பல ஆயிரம் கோடி வருமானம் கொட்டுகிறது. இந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக 6.1 பில்லியன் அமெரிக்க டாலர்களை பொழுதுபோக்குத் துறை ஈட்டியுள்ள நிலையில், இவர் மட்டும் 590 மில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பாதித்து முதலிடம் பிடித்துள்ளார்.

கிம் கர்தாஷியன் கணவர்
இந்த பட்டியலில் கைலி ஜென்னரின் உறவினரும் கிம் கர்தாஷியனின் கணவரும் பிரபல அமெரிக்க பாடகருமான கன்யே வெஸ்ட் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். 2020ம் ஆண்டு மட்டும் 170 மில்லியன் அமெரிக்க டாலர்களை இவர் ஈட்டியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்து சில மாதங்களுக்கு முன்பாக பரபரப்பை கிளப்பி இருந்தார்.

டுவைன் ‘ராக்’ ஜான்சன்
சூப்பர் ஹீரோ பிளாக் ஆதாம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரபல ஹாலிவுட் நடிகரும் முன்னாள் WWE சாம்பியனுமான டுவைன் ‘ராக்' ஜான்சன் இந்த ஆண்டு 87.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டி டாப் 10 இடத்தில் இடம்பிடித்துள்ளார். இவருக்கும் இவரது மனைவிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தது குறிப்பிடத்தக்கது.

டாப் 10 பிரபலங்கள்
போர்ப்ஸ் இதழில் இந்த ஆண்டு உலகளவில் சம்பளம் வாங்கிய பிரபலங்களின் டாப் 10 பட்டியலில் விளையாட்டு வீரர்களான ரோஜர் பெடரர், கிறிஸ்டியனா ரொனால்டோ, லியோன் மெஸ்ஸி, நெய்மர், நடிகர் டைலர் பெர்ரி, ஹோவார்ட் ஸ்டெர்ன், லெப்ரான் ஜேம்ஸ் உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர்.

கொரோனா தாக்கம்
கொரோனாவின் தாக்கத்தால் கடந்த ஆண்டை விட 200 மில்லியன் டாலர் அளவுக்கு ஒட்டுமொத்த பொழுதுபோக்கு துறையின் வருமானத்தில் குறைந்துள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர். ஏகப்பட்ட மாதங்கள் கொரோனாவால் உலகம் முடங்கினாலும் வெறும் 200 மில்லியன் டாலர்கள் மட்டும் தான் குறைந்துள்ளது என்பதும் ஆறுதலான விஷயம் தான்.