இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போட ரூ. 7 கோடி வாங்கும் கிம் தங்கச்சி
Recommended Video

நியூயார்க்: அமெரிக்க தொலைக்காட்சி நடிகையும், தொழில் அதிபருமான கைலி ஜென்னர் இன்ஸ்டாகிராம் மூலம் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.
திரையுக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், மாடல்கள் சமூக வலைதளங்கள் மூலம் பல்வேறு பொருட்களை விளம்பரப்படுத்துகிறார்கள். அப்படி ஒரு பொருளை விளம்பரப்படுத்த தங்களின் மார்க்கெட்டுக்கு ஏற்ப பணம் வாங்குகிறார்கள்.
இந்நிலையில் 2018ம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

கைலி ஜென்னர்
இங்கிலாந்தை சேர்ந்த ஹார்ப்பர் க்யூ என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் அமெரிக்க தொலைக்காட்சி நடிகையும், தொழில் அதிபருமான கைலி ஜென்னர் முதலிடத்தை பிடித்துள்ளார். அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போட ரூ. 7 கோடி வாங்குகிறார். ஒரு குழந்தைக்கு தாயான கைலிக்கு வெறும் 20 வயது தான் ஆகிறது.

இங்கிலாந்து
இன்ஸ்டாகிராம் மூலம் அதிகம் சம்பாதிக்கும் இங்கிலாந்து குடிமகன் முன்னாள் கால்பந்து வீரரான டேவிட் பெக்காம். அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு பொருளை விளம்பரப்படுத்த ரூ. 2 கோடி பெறுகிறார்.

செலினா கோமெஸ்
கடந்த ஆண்டு இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் இருந்த கைலி இந்த ஆண்டு முதலிடத்தை பிடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் அவரை 111 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள். அவரின் கைலி காஸ்மெடிக்ஸ் மூலம் மேலும் பிரபலமாகியுள்ளார். இன்ஸ்டாகிராம் பட்டியலில் கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த பாடகி செலினா கோமஸ் இந்த ஆண்டு இரண்டாவது இடத்தில் உள்ளார்.

கிம்
இன்ஸ்டாகிராம் மூலம் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்கள் பட்டியலில் கைலியின் அக்காவான கிம் கர்தாஷியன் வெஸ்ட் மூன்றாவது இடத்தில் உள்ளார். பாடகி பியான்ஸே, பாடகர் ஜஸ்டின் பீபர், நடிகர் ட்வெயின் ஜான்சன், கால்பந்து வீரர்கள் நேமார், ரொனால்டோ ஆகியோர் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளனர்.

கோஹ்லி
இன்ஸ்டாகிராம் மூலம் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்கள் பட்டியலில் கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லிக்கு 17வது இடம் கிடைத்துள்ளது. அவர் ஒரு போஸ்ட் போட ரூ. 80 லட்சம் பெறுகிறார்.


Click it and Unblock the Notifications











