ஆண்ட்ரியாவை நேரில் பார்க்கனுமா.. இன்னும் 5 நாளில் நல்ல வாய்ப்பு.. மிஸ் பண்ணீடாதீங்க!
சென்னை: சென்னை மக்களுக்கு மிகப்பெரிய இசை விருந்தை அளிக்கக்கூடிய தினம் என்றால் அது வரும் 29ஆம் தேதியைக் கூறலாம். ஏனெனில் KYN APP சார்பாக பலதரப்பட்ட இசை ரசிகர்களை ஒன்றிணைக்கும் முயற்சியாக மிகப்பெரிய Fusion Concert-க்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பிரதீப் குமார், ஆண்ட்ரியா, அசல் கோளார், பால் டப்பா என 4 வித்தியாசமான இசை கலைஞர்கள் ஒன்றிணைந்து ரசிகர்களை மகிழ்விக்க வருகின்றனர் என்றால் நம்ப முடிகிறதா?
பல வகையான இசை கலைஞர்கள் மற்றும் இசை ரசிகர்கள் ஒரே இடத்தில் கான்சர்ட் செய்வது வெளிநாடுகளில் மட்டுமே நடக்கக்கூடிய அரிய நிகழ்வு. அதை நம் சென்னை மக்களுக்காக KYN App முதல் முறையாக கொண்டு வந்துள்ளது. வரும் மார்ச் 29ம் தேதி நந்தனம் YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சிக்கு ஏற்கனவே 70% டிக்கெட்கள் விற்று தீர்ந்துவிட்ட நிலையில் தற்போது அதிரடி சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Flash Sale-ஆக வழக்கமான விலையில் இருந்து 50 % வரை தள்ளுபடி விலையில் தற்போது டிக்கெட்களை பெற்றுக்கொள்ள முடியும். ரூ.1099-ல் தொடங்கும் டிக்கெட் விலை, அதிகபட்சமாக முன் ரூ.2,599 வரை உள்ளன. முன்வரிசையில் நின்று ரசிக்க கூடிய டிக்கெட் விலையே ரூ. 2,599 தான். குறுகிய காலம் மட்டுமே இந்த சலுகை இருக்கும் என்பதால் உடனடியாக புக் செய்துக்கொள்ளுங்கள்.
டிக்கெட் புக்கிங்கிற்கு https://www.kynhood.com/event/67a60d75af00ecc94ddf0f86லிங்க்-ஐ பயன்படுத்திக்கொள்ளலாம்.
சென்னையின் All in All செயலியாக செயல்பட்டு வருவது தான் KYN (Know Your Neighbourhood). இந்த ஒரே செயலியின் மூலம் நம் வீட்டையும், பகுதியையும் சுற்றி நடக்கும் அன்றாட செய்திகள், நிகழ்ச்சிகள், ஆஃபர்கள் என அனைத்தையும் தெரிந்துக்கொள்ள முடியும். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் யார் வேண்டுமானாலும் அவர்களது நிகழ்ச்சிகளை, தொழிலை இங்கு விளம்பரம் செய்யலாம், யார் வேண்டுமானாலும் டிக்கெட்களை புக் செய்துக்கொள்ளலாம்.

இலவச எண்ட்ரி கொடுக்கும் நிகழ்ச்சிகள் முதல் பெரிய நிகழ்ச்சிகள் வரை அனைத்திற்கும் புக்கிங் உண்டு. நம்மை சுற்றியுள்ள நிகழ்ச்சி, ஆஃபர்கள், செய்திகள் அனைத்தையும் ஒரே இடத்தில் தரும் இந்த செயலியை பல பிரபலங்களும், மக்களும் பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சிக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளதால், ஏற்கனவே ரசிகர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகிறார்கள். எனவே, ஆர்வம் உள்ள ரசிகர்கள் இந்த வாய்ப்பை மிஸ் செய்துவிடாதீர்கள்.



Click it and Unblock the Notifications











