Cannes 2023 - கேன்ஸ் 2023 - இந்திய சர்வதேச திரைப்பட விழா போஸ்டர்.. வெளியிட்டார் மத்திய இணையமைச்சர்

கேன்ஸ்: Cannes 2023 (கேன்ஸ் 2023) கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியாவில் நடக்கவிருகும் சர்வதேச திரைப்பட விழாவுக்கான அதிகாரப்பூர்வ போஸ்டரை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வெளியிட்டார்.

ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவுக்கு அடுத்ததாக சினிமாத் துறையில் உலகப் புகழ் பெற்ற விழா என்று கருதப்படுவது 'கேன்ஸ் திரைப்பட விழா. பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் 1946ஆம் ஆண்டு முதல் வருடந்தோறும் இவ்விழா நடைபெற்றுவருகிறது. அந்த வகையில் 76ஆவது கேன்ஸ் திரைப்பட விழா நேற்று தொடங்கியது. இந்த விழாவானது இம்மாதம் 27ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இதில், உலகத்தில் பல்வேறு மொழிகளில் உள்ள திரைப்படங்கள், ஆவணப்படங்கள் திரையிடப்படவிருக்கின்றன. இது ஒரு பெரிய கௌரவமாகவே கருதப்படும்.

L.Murugan Unveils 54th International Film Festival of Indias Official Poster at Cannes

திரையிடப்படும் படங்கள்: இந்தியாவிலிருந்து, அனுராக் காஷ்யப் இயக்கி பிரபல நடிகை சன்னி லியோன் நடித்த 'கென்னடி' படம் மிட்நைட் ஸ்கீரினிங் பிரிவிலும், ராகுல் ராய் நடித்த 'ஆக்ரா' படம் ஃபோர்ட்நைட் பிரிவிலும் மற்றும் மணிப்பூரில் 1990ஆம் ஆண்டு வெளியான 'இஷானோ' படம் ப்ரஸ்டீஜியஸ் கேன்ஸ் கிளாசிக் பிரிவிலும் திரையிடப்படவுள்ளன. இதன் காரணமாக இந்திய திரைத்துறையினரும், திரையிடப்படும் படங்களில் பணியாற்றியவர்களும் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

பாரம்பரிய உடையில் மத்திய இணையமைச்சர்: மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல். முருகன், ஆஸ்கர் விருது வென்ற The Elephant whisperers ஆவண படத்தின் தயாரிப்பாளர் குனீத் மோங்கியா, முன்னாள் உலக அழகி மனுஷி சில்லார் உள்ளிட்டோர் சிவப்பு கம்பளத்தில் வலம் வந்தனர்.

L.Murugan Unveils 54th International Film Festival of Indias Official Poster at Cannes

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து கலந்துகொண்டார். அவர் அவ்வாறு சென்றது அங்கிருந்த பலரது கவனத்தையும் ஈர்த்தது. இவர்கள் தவிர சாரா அலிகான், இஷா குப்தா, மிருணால் தாக்கூர், அனுஷ்கா ஷர்மா, விக்னேஷ் சிவன் உள்ளிட்டோரும் இந்த விழாவில் பங்கேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய பெவிலியன்: இந்தச் சூழலில் எல்.முருகன் கேன்ஸில் இந்திய பெவிலியனை ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார். இதனையடுத்து கோவாவில் நடைபெறும் 54ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்கான அதிகாரப்பூர்வ போஸ்டரையும் அங்கு வைத்து அவர் வெளியிட்டார். மயில் தோகை விரிந்தபடி இருக்கும் அந்தப் போஸ்டரில், ஆர்.ஆர்.ஆர், பொன்னியின் செல்வன், காந்தாரா, தி லஞ்ச் பாக்ஸ், மாம், தன்ஹாஜி உள்ளிட்ட படங்களின் ஸ்டில்கள் இடம்பெற்றிருக்கின்றன.

கோவா சர்வதேச திரைப்பட விழா: மத்திய அரசின் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் மற்றும் தேசிய திரைப்பட மேம்பாட்டுக்கழகம் சார்பில் நடத்தப்படுவது இந்திய சர்வதேச திரைப்பட விழா ஆகும். சர்வதேச படைப்பாளிகள் ஒன்றுகூடும் இந்த விழாவில் சிறந்த படங்கள் திரையிடப்படும்.

L.Murugan Unveils 54th International Film Festival of Indias Official Poster at Cannes

இந்நிலையில் இந்த வருடத்துக்கான இந்திய சர்வதேச திரைப்பட விழா (54ஆவது விழா) கோவாவில் நவம்பர் 20ஆம் தேதி தொடங்கி நவம்பர் 28ஆம் தேதி முடிவடையவிருக்கிறது. சென்ற வருட சர்வதேச திரைப்பட விழாவில் தமிழில் இருந்து ஜெய் பீம், கிடா உள்ளிட்ட படங்கள் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X