தலையில் பாம்பை ஓடவிட்டு.. நிர்வாண போட்டோஷூட் நடத்திய எல். ராமசந்திரன்.. மிரட்டும் மேக்கிங் வீடியோ!
சென்னை: பிளேபாய் இதழ்களுக்கு போட்டோகிராஃபராக பணியாற்றி வரும் எல். ராமசந்திரன் தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல புகைப்படக் கலைஞர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.
சமீபத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியை வைத்து இவர் வித விதமாக எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள் வேற லெவலில் வைரலாகின.
இந்நிலையில், தற்போது ஒரு பெண்ணை நிர்வாணமாக நிற்க வைத்து பாடி பெயின்ட் செய்து அவர் தலையில் பாம்பு ஒன்றை ஓடவிட்டு எடுத்துள்ள போட்டோ பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

திருவாரூர்காரர்
தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமான் ஊரில் பிறந்தவர் தான் எல். ராமசந்திரன். அமெரிக்காவின் பிரபல ஃபேஷன் இதழ்களான பிளே பாய், மேக்ஸிம் என ஏகப்பட்ட மேகஸின்களுக்கு புகைப்படக் கலைஞராக பணியாற்றி புகழ்பெற்றவர். நிர்வாண புகைப்படங்களை கலை அழகுடன் வித்தியாசமாக எடுப்பதில் வல்லவர்.

ரம்யா பாண்டியன் போட்டோஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னதாக நடிகை ரம்யா பாண்டியன் இவரை வைத்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவின. தேவலோக பெண்ணை போல அலங்கரித்து கவர்ச்சி பொங்க ரம்யா பாண்டியனை காட்டி இருந்தார் ராமசந்திரன்.

தேவதையாக யாஷிகா
அதே போல பிக் பாஸ் தமிழ் சீசன் 2 பிரபலமும் நடிகையுமான யாஷிகா ஆனந்தும், எல். ராமசந்திரனை வைத்து ஒரு கவர்ச்சி போட்டோஷூட் நடத்தினார். தேவதை போல சிறகெல்லாம் விரித்துக் கொண்டு இருக்கும் படி எடுக்கப்பட்ட அந்த போட்டோஷூட் புகைப்படங்களும் மேக்கிங் வீடியோக்களும் சமூக வலைதளத்தில் வைரலாகின.

வித விதமான கெட்டப்புகளில்
லாக்டவுனில் இருந்த மன அழுத்தத்தை வெளிப்படுத்தும் விதமாக நடிகர் விஜய்சேதுபதி எல். ராமசந்திரன் உடன் இணைந்து எடுத்துக் கொண்ட போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தை கலக்கின. நீண்ட தாடியுடன் கையில் உயிர் எழுத்துக்களை வைத்துக் கொண்டும் போட்டோக்களை போட்டு அசத்தினார்.
நிர்வாண போட்டோஷூட்
இந்நிலையில், தற்போது பெண் மாடல் ஒருவரை நிர்வாணமாக வைத்து உடல் முழுக்க பாடி பெயின்ட் செய்து தலையில் பூக்களை நட்டு தனக்கே உரிய பாணியில் ஒரு கலை படைப்பாகவே அவரை மாற்றி எடுத்த போட்டோஷூட் புகைப்படம் பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. காரணம் அதில் அந்த பெண்ணின் தலையில் ஒரு நிஜ பாம்பு இருந்தது தான்.

பாம்பை ஓடவிட்டு
இந்நிலையில், தற்போது அந்த போட்டோவை எப்படி உருவாக்கினேன் என மேக்கிங் வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எல். ராமசந்திரன் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் குட்டி மலைப் பாம்பு ஒன்றை அந்த பெண்ணின் தலையில் ஓடவிட்டு எல். ராமசந்திரன் வித்தியாசமாக போட்டோ எடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











