L2 Empuraan: செகண்ட் பார்ட் கன்ஃபார்ம்... டைட்டிலை மாற்றிய சூப்பர் ஸ்டார்... ஆக்ஷன் தர்பார் ரெடி
திருவனந்தபுரம்: மலையாளத்தில் 2019ம் ஆண்டு வெளியான லூசிபர் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
மோகன்லால், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்தை பிருத்விராஜ் இயக்கியிருந்தார்.
மலையாளத்தில் 200 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் திரைப்படமான லூசிபர், தெலுங்கிலும் ரீமேக் ஆனது.
இந்நிலையில், இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.
விரைவில் லூசிபர் இரண்டாம் பாகம்:மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் கேரியரில் லூசிபர் திரைப்படம் தரமான சம்பவம் செய்திருந்தது. 2019ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை பிருத்விராஜ் இயக்கியிருந்தார். இதனை முதல் படத்துக்கான எந்த அறிகுறியும் இல்லாமல், மேக்கிங் உட்பட அனைத்திலும் பக்கா கமர்சியலாக இயக்கினார். இதனால், இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

மோகன்லால் அண்டர்கவர் டானாக நடித்த லூசிபர் பொலிட்டிக்கல் ஜானரில் உருவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல், ஆக்ஷனில் செம்ம மாஸ் காட்டிய லூசிபர், பாக்ஸ் ஆபிஸில் 200 கோடி ரூபாய் வசூலித்தது. மலையாளத்தில் 200 கோடி வசூல் செய்த முதல் திரைப்படமாக இது அமைந்தது. இதனால் லூசிபர் படத்தை பார்த்து மிரண்டு போன சிரஞ்சீவி, இதனை தெலுங்கில் காட்ஃபாதர் என்ற பெயரில் ரீமேக் செய்தார். இந்தப் படத்தை மோகன்ராஜா இயக்க, கேமியோ ரோலில் சல்மான்கான் நடித்திருந்தார்.
லூசிபர் மெஹா ஹிட் அடித்ததுமே இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என சொல்லப்பட்டது. அதன்படி தற்போது லூசிபர் செகண்ட் பார்ட் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால், லூசிபர் என்ற டைட்டிலில் இல்லாமல் 'எம்புரான்' என்ற தலைப்பில் உருவாகவுள்ளதாம். இது படக்குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எல்2 எம்புரான் என்ற இந்த டைட்டிலில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளதாம்.
மேலும், லூசிபர் முதல் பாகத்தை மோகன்லாலின் ஆசிர்வாத் சினிமாஸ் தயாரித்திருந்தது. ஆனால், இரண்டாம் பாகம் இன்னும் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளதால், ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனமும் சேர்ந்து தயாரிக்கவுள்ளதாம். இதனால், எம்புரான் பான் இந்தியா படமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேஜிஎஃப், காந்தாரா படங்களை தயாரித்ததன் மூலம் இந்தியளவில் மிகப்பெரிய மார்க்கெட் இந்நிறுவனத்துக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்த லூசிபர் இரண்டாம் பாகம் குறித்த இந்த அப்டேட், மலையாள திரையுலகிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லூசிபருக்கு பின்னர் ப்ரோ டேடி என்ற படத்தை இயக்கியிருந்தார் பிருத்விராஜ். இதிலும் மோகன்லால் தான் ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரித்விராஜ் இயக்கும் அவரது மூன்றாவது படத்திலும் மோகன்லால் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.


Click it and Unblock the Notifications











