L2 Empuraan: மோகன்லால், பிருத்விராஜ் கூட்டணியில் L2 Empuraan லோடிங்... மல்லுவுட்டில் களமிறங்கிய லைகா

சென்னை: மலையாளத்தில் 2019ம் ஆண்டு வெளியான லூசிபர் திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது.

பிருத்விராஜ் இயக்கத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.

L2 Empuraan: Mohanlal and Prithviraj combo L2 Empuraan official update released

லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக L2 Empuraan இந்தாண்டு உருவாகவுள்ளது.

L2 Empuraan படத்தின் அபிஸியல் அப்டேட்டை படக்குழு தற்போது வெளியிட்டு அதிரடி காட்டியுள்ளது.

L2 Empuraan அபிஸியல் அப்டேட்
மல்லுவுட் சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் 2019ம் ஆண்டு வெளியான லூசிபர், இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தது. மலையாளத்தில் முன்னணி ஹீரோவான பிருத்விராஜ் இந்தப் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். மலையாளத்தில் முதன்முறையாக 200 கோடி வசூல் செய்த படம் என்ற பெருமை லூசிபருக்கு கிடைத்தது.

மோகன்லாலுடன் டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். பிருத்விராஜ் இயக்குநராக மட்டும் இல்லாமல் ஒரு கேமியோ ரோலிலும் நடித்திருந்தார். இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என பிருத்விராஜ் அப்போதே தெரிவித்திருந்தார். அதன்படி L2 Empuraan என்ற டைட்டில் லூசிபர் 2ம் பாகம் உருவாகவுள்ளது.

L2 Empuraan: Mohanlal and Prithviraj combo L2 Empuraan official update released

L2 Empuraan பற்றிய அப்டேட் ஏற்கனவே வெளியாகின. ஆனால், இன்றுதான் அபிஸியலாக படக்குழு சார்பில் இருந்து அறிவிப்பு வெளியானது. லூசிபரை தொடர்ந்து L2 Empuraan படத்தையும் ஆசிர்வாத் சினிமாஸ் தயாரிக்கவுள்ளது. முக்கியமாக ஆசிர்வாத் சினிமாஸுடன் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் முதன் முறையாக மலையாளத்தில் களமிறங்குகிறது லைகா புரொடக்‌ஷன்ஸ்.

லூசிபர் படத்தின் வீடியோ கிளிம்ப்ஸுடன் L2 Empuraan அபிஸியல் அப்டேட்டை வெளியிட்டுள்ளது படக்குழு. மோகன்லாலின் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் தெறிக்கும் L2 Empuraan அப்டேட், ரசிகர்களுக்கும் அதிக ஹைப் கொடுத்துள்ளது. இதனால், லூசிபரை போலவே L2 Empuraan படமும் மரண மாஸ் ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

L2 Empuraan: Mohanlal and Prithviraj combo L2 Empuraan official update released

மோகன்லால், பிருத்விராஜ் கூட்டணியில் லைகா நிறுவனமும் இணைந்துள்ளதோடு, L2 Empuraan பான் இந்தியா படமாக உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளிலும் L2 Empuraan வெளியாகிறது. முன்னதாக லூசிபர் திரைப்படம் தெலுங்கில் காட்ஃபாதர் என்ற பெயரில் ரீமேக்கானது. மோகன் ராஜா இயக்கிய இந்தப் படத்தில் சிரஞ்சீவி, நயன்தாரா, சல்மான் கான் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X