Empuraan: மை டியர் மோகன்லால்.. எம்புரான் டிரெய்லர் ஃபென்டாஸ்ட்டிக்கா இருக்கு.. ரஜினிகாந்த் வாழ்த்து!

சென்னை: பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள லூசிஃபர் 2 (அ) எம்புரான் திரைப்படத்தின் அட்டகாசமான தமிழ் டிரெய்லரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு மோகன்லால் மற்றும் பிரித்விராஜ் சுகுமாரனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு மலையாளத்தில் பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெளியான லூசிஃபர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. த்ரிஷ்யம் 2 படத்துக்குப் பிறகு மோகன்லாலுக்கு மலையாளத்தில் மார்க்கெட் அடிவாங்கி வந்த நிலையில், இந்த படம் மீண்டும் ஒரு மான்ஸ்டர் வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

L2 Empuraan Trailer released by Super Star Rajinikanth with a sweet wishes to Mohanlal

சல்மான் கானின் சிக்கந்தர் மற்றும் எம்புரான் என இரு பெரிய படங்கள் வரும் மார்ச் 27ம் தேதி திரையரங்குகளில் கிளாஷ் ஆஃப் தி டைட்டன்ஸ் ஆக மோத காத்திருக்கின்றன.

லூசிஃபர்: மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் பிரித்விராஜ் தனக்குள் ஒளிந்துக் கிடந்த இயக்குநரை தட்டி எழுப்பி மோகன்லாலை வைத்து பண்ண பெரிய சம்பவம் தான் லூசிஃபர். முதலமைச்சர் உயிரிழந்துக் கிடக்க அவர்களது குடும்பத்தில் நடக்கும் அரசியல் சூழ்ச்சிகளும் அதை அதே குடும்பத்தில் முதலமைச்சரின் வளர்ப்பு மகனான ஸ்டீபன் நெடும்பள்ளி (அ) லூசிஃபர் எப்படி சரி செய்கிறார் என்கிற கதையை உருவாக்கி அதில், முக்கிய கதாபாத்திரத்தில் எக்ஸ்டன்டட் கேமியோவாகவும் பிரித்விராஜ் நடித்து கலக்கியிருப்பார்.

Take a Poll

எம்புரான் டிரெய்லர் ரிலீஸ்: வரும் மார்ச் 27ம் தேதி மோகன்லால் நடித்துள்ள எம்புரான் படத்தை புரமோட் செய்யும் விதமாக அதன் அட்டகாசமான டிரெய்லர் வெளியாகி உள்ளது. தமிழில் அந்த டிரெய்லரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு காட்சியும் வேறலெவலில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. சுராஜ் வெஞ்சரமுடுவுக்கு இந்த 2ம் பாகத்தில் சிறப்பான கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது டிரெய்லரில் தெளிவாக தெரிகிறது. டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர் என ஒவ்வொரு கதாபாத்திரத்தின் காட்சிகளும் மிரட்டுகின்றன. மோகன்லால் மற்றும் அவருக்கு துணையாக நிற்கும் கமோண்டோவாக வரும் பிரித்விராஜ் என பக்கா பேக்கேஜாக உள்ளது டிரெய்லர். கடைசியில் நீங்க யாரு? என்கிற கேள்வியும் அதற்கு லூசிஃபர் என மோகன்லால் சொல்லும் பதிலும் வெறித்தனம்.

மை டியர் மோகன்: மோகன்லாலை நடிகர் ரஜினிகாந்த் மைடியர் மோகன் உன்னோட எம்புரான் டிரெய்லர் ஃபென்டாஸ்ட்டிக்கா இருக்கு என நண்பனுக்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டிரெய்லரை வெளியிட்டுள்ளார். லூசிஃபர் படத்தை தமிழில் ரீமேக் செய்தால் ரஜினிகாந்த் நடித்தால் சிறப்பாக இருக்கும் என ஏற்கனவே பிரித்விராஜ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தெலுங்கு ரீமேக்கில் சல்மான் கான்: லூசிஃபர் படத்தை தெலுங்கில் மோகன் ராஜா காட் ஃபாதர் எனும் டைட்டிலில் சிரஞ்சீவியை வைத்து ரீமேக் செய்தார். நடிகை நயன்தாரா அந்த படத்தில் மஞ்சு வாரியர் நடித்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பிரித்விராஜ் நடித்த கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கானே நடித்திருந்தார். தற்போது அவருடைய சிக்கந்தர் படத்துக்கு போட்டியாகவே லூசிஃபர் 2 எனும் எம்புரான் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. முழுக்க முழுக்க ஐமேக்ஸ் கேமராவில் படமாக்கப்பட்ட முதல் மலையாள படமும் இதுதானாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X