கிளைமாக்ஸ் ஷூட்டிங்.. வயல் அறுவடைக்கு காத்திருக்கிறது 'லாபம்' படக்குழு.. இயக்குனர் தகவல்!

By

சென்னை: லாபம் படத்தின் கிளைமாக்ஸூக்காக அறுவடை நடக்கும் நாளை எதிர்பார்ப்பதாக அதன் இயக்குனர் ஜனநாதன் சொன்னார்.

இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு ஆகிய படங்களை இயக்கியவர் எஸ்.பி.ஜனநாதன்.

இவர் இப்போது இயக்கி வரும் படம், 'லாபம்'. விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வருகிறார்.

ஸ்ருதி ஹாசன்

ஸ்ருதி ஹாசன்

ஹீரோயினாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். மேலும் நடிகை சாய் தன்ஷிகா, ஜெகபதிபாபு, கலையரசன், ஹரீஷ் உத்தமன் உட்பட பலர் நடிக்கின்றனர். ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசை அமைக்கிறார். இதன், பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

லாபம்னா என்ன?

லாபம்னா என்ன?

விவசாயத்தையும் விவசாயிகளின் நிலை பற்றியும், லாபம் என்றால் என்ன என்பது பற்றியும் பேசும் இந்தப் படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கொரோனா வைரஸ் காரணமாக மற்ற படங்களைப் போல, இதன் ஷூட்டிங்கும் தொடங்கப்படாமல் இருந்தது. இப்போது அரசு தளர்வுகளை அறிவித்ததை அடுத்து படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கி நடந்து வருகின்றன.

கிளைமாக்ஸ் காட்சி

கிளைமாக்ஸ் காட்சி

இந்நிலையில், லாபம் படத்தின் ஷூட்டிங்கும் சென்னை அருகே நடந்து வருகிறது. இன்னும் மூன்று நாட்களுடன் இதன் இப்போதைய ஷெட்யூல் முடிவடைகிறது. இதையடுத்து கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட இருக்கிறது. இதற்காக வயல் அறுவடை நடக்கும் நாட்களை படக்குழு எதிர்பார்த்து காத்திருக்கிறது.

வயல் அறுவடை

வயல் அறுவடை

இதுபற்றி, இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனிடம் கேட்டபோது, 'இன்னும் இரண்டு நாட்களில் இப்போதைய ஷெட்யூல் முடிவடைகிறது. இப்போது ஹீரோ இல்லாத காட்சிகளை படமாக்கி வருகிறோம். படத்தின் கிளைமாக்ஸ் வயல் அறுவடை நேரத்தில் நடைபெறுவது இருக்கிறது. அதற்காக வயல் அறுவடையை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X