இறகால் மனங்களை வருடிய ஆமிர்கான்.. ‘லால் சிங் சத்தா’ டைட்டில் டிசைன் ரிலீஸ்!

மும்பை: பாலிவுட் நடிகர் ஆமிர்கானின் அடுத்த படம் லால் சிங் சத்தா. 2020ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ள அந்த படத்தின் டைட்டில் டிசைன் வீடியோவை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஆமிர்கான்.

ஆமிர்கான் வெளியிட்டுள்ள லால் சிங் சத்தா டைட்டில் டிசைன் வீடியோ இந்தியளவில் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.

ஆஸ்கர் விருது வென்ற ஹாலிவுட் படமான Forestt Gump படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் லால் சிங் சத்தா.

ரீமேக் ராசி

ரீமேக் ராசி

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான கஜினி படத்தை பார்த்த ஆமிர்கான், அந்த கதையில் மிகவும் ஆர்வம் கொண்டு அதனை பாலிவுட்டில் ரீமேக் செய்து மிகப்பெரிய வெற்றியை அடைந்தார். அதேபோல தற்போது, ஹாலிவுட் படமான Forestt Gump படத்தை ரீமேக் செய்து நடித்து வருகிறார்.

ஹாட்ரிக் நாயகி

ஹாட்ரிக் நாயகி

3 இடியட்ஸ் படத்தில் ஆமிர்கானுடன் முதன்முறையாக ஜோடி சேர்ந்தார் நடிகை கரீனா கபூர். அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், தலாஷ் படத்தில் மீண்டும் இருவரும் ஜோடி சேர்ந்தனர். தலாஷ் படத்தை தொடர்ந்து, தற்போது, உருவாகி வரும் லால் சிங் சத்தா படத்திலும் ஆமிர்கானுக்கு ஜோடியாக கரீனா கபூர் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார்.

சீக்ரெட் சூப்பர்ஸ்டார்

சீக்ரெட் சூப்பர்ஸ்டார்

ஆமிர்கான் தயாரிப்பில் தங்கல் நாயகி ஜைரா வாசிம் நடிப்பில் உருவான சீக்ரெட் சூப்பர்ஸ்டார் படம் ஆமிர்கானுக்கு மிகப்பெரிய லாபத்தை கொடுத்தது. இந்தியாவை விட சீனாவில் ரிலீசான சீக்ரெட் சூப்பர்ஸ்டார் 800 கோடிக்கு மேல் வசூல் செய்து அசத்தியது. சீக்ரெட் சூப்பர்ஸ்டார் படத்தை இயக்கிய அத்வைத் சந்திரன் இயக்கத்தில் தான் 'லால் சிங் சத்தா' உருவாகி வருகிறது.

டைட்டில் டிசைன்

'லால் சிங் சத்தா' படத்தின் 36 நொடிகள் ஓடக்கூடிய டைட்டில் டிசைனை நடிகர் ஆமிர்கான், தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அந்த வீடியோவில், இறகு ஒன்று வானில் ‘லால் சிங் சத்தா' டைட்டிலை ‘கியா படா ஹம், மெயின் ஹை கஹானி, யா ஹை கஹானி மெயின் ஹும்' என்ற பாடலுடன் வரைகிறது.

டிரெண்டிங்

ஆமிர்கான் வீடியோவை வெளியிட்ட சில நிமிடங்களிலேயே, இணையத்தில் குவிந்த ஆமிர்கான் ரசிகர்கள், இந்தியளவில் #LaalSinghChaddha ஹேஷ்டேகை டிரெண்ட் செய்து வருகின்றனர். சிங் கெட்டப்பில் இருக்கும் ஆமிர்கான் புகைப்படங்களை ஷேர் செய்து அடுத்த கிறிஸ்துமஸ் வெற்றி ஆமிர்கானுக்குத்தான் என அவரது ரசிகர்கள் ட்வீட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X