ஆஸ்கருக்கே அல்வா கொடுக்க பார்த்த லாபதா லேடீஸ்.. அட்லீக்கே டஃப் கொடுக்கும் அமீர்கான் முன்னாள் மனைவி

மும்பை: அமீர்கானின் முன்னாள் மனைவி கிரண் ராவ் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியாகி மக்களின் வரவேற்பை பெற்ற படம் லாபதா லேடீஸ். இப்படம் இந்தியாவின் சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. இப்படம் ஒரு அரேபிய படத்தின் காபி என தகவல் வெளியாகியுள்ளது. இது உண்மையா என நெட்டிசன்கள் அலசி ஆராய தொடங்கிவிட்டனர்.

இந்திய திரையலகில் ஹாலிவுட் தரத்திற்கு மேக்கிங்கில் இந்திய இயக்குநர்கள் மிர்டடியிருந்தாலும் ஒரு சில காட்சிகள் ரசிகர்களுக்கு அப்படியே ஹாலிவுட் படத்தை பார்த்தது போன்ற உணர்வை தரும். இன்றைய சூழலில் ஒரு படத்தின் போஸ்டர், பாடல், டீசர் என அனைத்தையும் ரசிகர்கள் ஸ்பாயில் செய்ய தொடங்கிவிட்டனர். சமீபத்தில் இயக்குநர் சுந்தர் சி அளித்த பேட்டியில், தெலுங்கு சினிமாவில் ஒரு படத்தை பார்த்த பாது நான் எடுத்த படத்தையே அப்படியே ஒரு சீன் விடாமல் காபி அடித்து எடுத்திருந்தனர். ஆனால், அதற்கான காபி ரைட்ஸ் வாங்கவில்லை எனக் கூறி ஆதங்கப்பட்டார்.

laapataa-ladies-copy-of-burqa-city-shortfilm

அதேபோன்று இயக்குநர் விக்ரமனும் உன்னை நினைத்து படத்தை அப்படியே கன்னடத்தில் எடுத்திருந்தனர். ஆனால், இதற்கான ரீமேக் உரிமையை அவர்கள் பெறவில்லை என கூறி வேதனையடைந்தார். குறிப்பாக தமிழ் படங்களை இயக்கும் பல இயக்குநர்கள் ஹாலிவுட் படங்களை காபி எடுத்து எடுப்பதாகவும் ரசிகர்கள் கூறி கலாய்ப்பது வாடிக்கையாகி வருகிறது. இதில் ஒரு சில தமிழ் படங்களில் வரும் ஒவ்வொரு சீனையும் திருடி முழு படமாக எடுத்து ஒருவர் வெற்றி அடைந்துள்ளார் என சில இயக்குநர்களை ரசிகர்கள் கலாய்த்தும் வருகின்றனர்.

லாபதா லேடீஸ் காபியா? ஆனால், கடந்தாண்டு வெளியான இந்தி திரைப்படம் ஒன்று இந்திய அளவில் வரவேற்பை பெற்றது. ஆஸ்கர் ரேஸிலும் இருந்து வெளியேறிய லாபதா லேடீஸ் திரைப்படம் காபி என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இப்படம் அரபு குறும்படத்தின் காபி என கூறப்படுகிறது. பிரெஞ்ச் திரைப்பட தயாரிப்பாளர் Fabrice Bracq கடந்த 2019ஆம் ஆண்டு இயக்கியிருந்தார். இந்த குறும்படத்தின் கதையைத்தான் இந்திய கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு அமீர்கானின் முன்னாள் மனைவி கிரண் ராவ் இயக்கியிருப்பதாக நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர்.

laapataa-ladies-copy-of-burqa-city-shortfilm

மக்கள் வரவேற்பு: இயக்குநர் கிரண் ராவ் தோபிகாட் படத்தை தொடர்ந்து 12 வருடத்திற்கு பிறகு இப்படத்தை இயக்குவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. லாபதா லேடீஸ் திரைப்படத்தில், ஒரே நாளில் திருமணம் ஆன இரு புது தம்பதிகள் ரயிலில் ஒன்றாகப் பயணிக்கின்றனர். இரண்டு ஜோடிகளும் ஒரே மாதிரி உடை அணிந்திருந்ததால், இதில் ஒருவரது மனைவி, தவறுதலாக மற்றொரு ஜோடியின் கணவருடன் சென்று விடுகிறார். இந்த படத்தில் இந்தியச் சமூகத்தில் நிலவும் ஆணாதிக்கத்தைக் கிண்டல் செய்வது போன்று இருக்கும். இப்படத்தை இந்திய மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழ்ந்தனர். விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

புர்கா சிட்டி: 2019ஆம் ஆண்டு வெளியான புர்கா சிட்டி என்ற குறும்படத்தில் இருந்துதான் லாபதா லேடீஸ் முழு படமாக உருவாகியிருக்கிறது. எந்தவொரு படைப்பாளியும் இதை காபி என்று கூறாமல் இன்ஸ்பிரேஷன் என கூறி தப்பித்துகொள்வார்கள். அமீர்கானின் முன்னாள் மனைவிக்கு இது காபியா அல்லது இன்ஸ்பிரேஷனா என்பதை அவர் தான் தெளிவுப்படுத்த வேண்டும் என நெட்டிசன்கள் கூறுகின்றனர். இப்படத்தை தயாரித்திருக்கும் அமீர்கானுக்கு தெரியாமலா இது நடந்திருக்கும். நல்ல வேளை இப்படம் ஆஸ்கர் விருது பெறவில்லை. பெற்றிருந்தால் இந்திய மானம் கப்பல் ஏறியிருக்கும் என்றும் ஆஸ்கருக்கே அல்வா கொடுக்க பாத்திருக்காங்க எனவும் நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X