ஒரு தமிழ் படம் கூட இல்லை.. லெட்டர்பாக்ஸ்ட் டாப் 25.. முன்னிலையில் லாப்தா லேடீஸ், மஞ்சுமெல் பாய்ஸ்!

சென்னை: உலக அளவில் இந்த ஆண்டு வெளியான படங்களில் முதல் 10 இடத்தில் மூன்று இந்திய படங்கள் அதிலும் இரண்டு மலையாள படங்கள் இடம்பெற்றுள்ளன. ஒட்டுமொத்தமாக 25 சிறந்த படங்களின் பட்டியலை Letterboxd நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆனால், அதில் ஒரு தமிழ் படம் கூட இந்த ஆண்டு இடம் பிடிக்கவில்லை.

மலையாள படங்களை தமிழ் சினிமா ரசிகர்கள் உள்பட உலக ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். ஆனால் அதே அளவுக்கு தமிழில் வெளியாகும் படங்களை யாரும் மதிப்பதில்லை என்கிற குற்றச்சாட்டுகளை சில சினிமா பிரபலங்கள் எழுப்பி உள்ள நிலையில், சர்வதேச அளவில் பிரபலமான லெட்டர்பாக்ஸ்ட் கூட ஒரு தமிழ் படத்தையும் கண்டுகொள்ளவில்லை என்பது அதிர்ச்சியை அளிக்கிறது.

Manjummel Boys Premalu Aavesham

இந்தி படங்களில் லாப்தா லேடீஸ் 5வது இடத்தை பிடித்து மாஸ் காட்டி விட்டது. மேலும், சில இந்தி படங்களும் இந்த டாப் 25 பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

5வது இடத்தில் லாப்தா லேடீஸ்: அமீர்கானின் முன்னாள் மனைவி கிரண் ராவ் இயக்கத்தில் இந்த ஆண்டு மார்ச்1ம் தேதி வெளியான லாப்தா லேடிஸ் திரைப்படம் சர்வதேச படங்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. முதல் இடத்தில் டூன் பார்ட் 2 திரைப்படம் இடம்பெற்றுள்ளது.

மலையாள படங்கள்: லெட்டர் பாக்ஸ்ட் இணையதளம் வெளியிட்டுள்ள டாப் 25 படங்களின் பட்டியலில் மலையாள திரைப்படமான மஞ்சுமெல் பாய்ஸ் 7வது இடத்தில் உள்ளது. ஃபியூரியோஸா மேட்மேக்ஸ் 9வது இடத்தை பிடித்துள்ள நிலையில் 10-வது இடத்தில் ஆட்டம் எனும் மலையாள படம் இடம்பெற்றுள்ளது. மேலும் 15-வது இடத்தில் மம்மூட்டி நடித்த பிரமயுகம், 16-வது இடத்தில் பகத் பாஸில் நடித்த ஆவேசம் கடைசியாக 25-வது இடத்தில் மமிதா பைஜு நடித்த பிரேமலு உள்ளிட்ட படங்கள் இடம்பெற்றுள்ளன. பாலிவுட் படமான சம்காலா 20வது இடத்தை பிடித்துள்ளது.

ஒரு தமிழ் படமும் இல்லை: இந்த ஆண்டு கேப்டன் மில்லர், அயலான், ப்ளூ ஸ்டார், ஜே பேபி, பைரி, லால் சலாம், சிங்கப்பூர் சலூன், கருடன், மகாராஜா, அரண்மனை 4 என ஏராளமான படங்கள் வெளியானாலும் ஒரு தமிழ்ப் படம் கூட இந்த டாப் 25 இடத்தில் ஒரு இடத்தை கூட பிடிக்கவில்லை. அடுத்த 6 மாதங்களில் வரவுள்ள படங்கள் இதிலிருந்து மாறுபட்டு சிறப்பான வெற்றியையும் தரமான விமர்சனத்தையும் ரசிகர்களின் விருப்பத்தையும் பெறும் என எதிர்பார்க்கலாம். IMDB ரேட்டிங்ஸ் போல Letterboxdல் ஒரு படம் இடம்பெற வேண்டுமானால் குறைந்தது 2000 பேர் ரேட்டிங் கொடுத்திருக்க வேண்டும். அப்போதுதான் இந்த இணையத்தில் டாப் 25 இடத்தில் படங்கள் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X