பிரச்சினை வரக்கூடாதுன்னு தலைப்பை எங்கிருந்தெல்லாம் சுடுறாங்க பாருங்கப்பா!

குழந்தை வளர்ப்பு குறித்து பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கும் படமாக உருவாகி வருகிறது லட்டு.

Recommended Video

லட்டு குணமா சொல்லணும் திரைப்பட பூஜை- வீடியோ

சென்னை: குழந்தைகளுக்கு எதைச் சொன்னாலும் குணமாக சொல்லணும் என்ற மெசேஜுடன் உருவாகி வருகிறது லட்டு திரைப்படம்.

கிரிஸ்டல் கிரியேஷன்ஸ் அமுதா ஆனந்த் தயாரிப்பில் ஐரிஸ் புரொடெக்ஷன்ஸ் பி.ராதாகிருஷ்ணன் இணை தயாரிப்பில் உருவாகும் திரைப்படம் " லட்டு "- குணமாக சொல்லுங்க.

இப்படத்தை இயக்குனர் கே.பாலசந்தரிடம் எடிட்டராக பணியாற்றிய வஜ்ரவேல் ஆனந்த் இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகனாக குணா பாபு நடிக்கிறார்.

அறிமுக நாயகி ஸ்வேதா

அறிமுக நாயகி ஸ்வேதா

இவர் இரும்புத்திரை , தமிழ் படம் 2.0 , தீரன் அதிகாரம் ஒன்று , காளி போன்ற படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். படத்தின் கதாநாயகியாக ஸ்வேதா அறிமுகமாகிறார். குழந்தை நட்சத்திரங்களாக விஷ்வேஷ்வரன் , விக்னேஸ்வரன் ஆகியோர் நடிக்கயுள்ளனர்.

 குணமா சொல்லணும்

குணமா சொல்லணும்

குழந்தைகளுக்கு எதை சொன்னாலும் குணமாக சொல்ல வேண்டும் என்பதை இப்படம் இப்படம் கூறுகிறது. அம்மா இல்லாத இரட்டை குழந்தைகளை தந்தை ஒருவர் மட்டும் எப்படி வளர்க்கிறார் என்பதையும் அதை சார்ந்த இன்னும் பல சுவாரசியமான விஷயங்களையும் இப்படத்தின் கதை பேசுகிறது.

படப்பிடிப்பு துவக்கம்

படப்பிடிப்பு துவக்கம்

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 29ம் தேதி பூஜையுடன் சென்னையில் துவங்கி ஓக்கேனக்கல் , திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் ஒரே ஷெட்யூலாக தொடர்ந்து 35 நாட்கள் நடைபெறுகிறது. இப்படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் பை -லிங்குவல் படமாக வெளியாகவுள்ளது.

குணமா சொல்லணும் வீடியோ

குணமா சொல்லணும் வீடியோ

சமீபத்தில் குழந்தை ஒன்று தனது தாயிடம் அடிக்கக்கூடாது, குணமா சொல்லணும் எனப் பேசும் வீடியோ ஒன்று வைரலானது. அதை வைத்து நிறைய டப்ஸ்மாஷ் மற்றும் மீம்ஸ்கள் வெளிவந்தன. இந்நிலையில் மிகவும் பிரபலமான அந்த வசனத்தையே இப்படத்திற்கு தலைப்பாக்கி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Read more about: film
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X