திருப்பதி லட்டு பாவங்களே வந்துடுச்சே.. பவன் கல்யாணையே கலாய்த்த பரிதாபங்கள் டீம்!

சென்னை: திருப்பதி லட்டு விவகாரம் பற்றி பேசினாலே சர்ச்சையாகும் அது ரொம்பவே சென்சிடிவான டாபிக் என பேசியதற்கே பவன் கல்யாணின் கோபத்திற்கு ஆளான நடிகர் கார்த்தி உடனடியாக மன்னிப்பு கேட்டது பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கும் நிலையில், லட்டு பாவங்கள் என்கிற வீடியோவையே பரிதாபங்கள் யூடியூப் சேனல் டீம் தற்போது வெளியிட்டுள்ளது.

திருப்பதி லட்டு பிரசாதத்தில் மாட்டுக் கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலந்திருப்பதை ஆந்திராவின் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் உறுதி செய்துள்ளனர்.

pawan kalyan parithabangal

திருப்பதியின் புனிதத் தன்மையை மீட்டெடுக்கும் விதமாக 11 நாட்கள் பவன் கல்யாண் விரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார். அதை வைத்தும் ட்ரோல் செய்து காமெடி செய்துள்ளனர் கோபி சுதாகர்.

திருப்பதி லட்டு சர்ச்சை: உலகளவில் பிரசித்தி பெற்ற திருப்பதி கோயிலின் புனிதத் தன்மையை கெடுக்கும் விதமாக திருப்பதி லட்டுவில் மாட்டுக் கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது நாட்டையே உலுக்கியுள்ளது. தினமும் லட்சக் கணக்கானோர் வழிபட்டு செல்லும் புனித ஸ்தலமாக இருக்கும் திருப்பதியின் முக்கிய பிரசாதனமான லட்டுவில் இப்படியொரு கலப்படம் நடந்திருப்பது உறுதியானது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மன்னிப்பு கேட்ட கார்த்தி: மெய்யழகன் படத்திற்கான புரமோஷனுக்காக ஆந்திராவுக்கு சென்றிருந்த நடிகர் கார்த்தியிடம் திடீரென தொகுப்பாளினி லட்டு பற்றி கேள்வி எழுப்ப அது மிகவும் சென்சிடிவான விஷயம் லட்டு பற்றி பேச மாட்டேன் எனக் கூறியிருந்தார். பவன் கல்யாண் லட்டு பற்றி யாரும் வேடிக்கையாக கூட பேசக் கூடாது என எச்சரித்துள்ள நிலையில், உடனடியாக கார்த்தி மன்னிப்பும் கோரியுள்ளார்.

லட்டு பரிதாபங்கள்: ஆனால், கோபி சுதாகர் இருவரும் நடத்தி வரும் பரிதாபங்கள் யூடியூப் சேனலில் தற்போது 15 நிமிடத்துக்கு லட்டு தொடர்பான வீடியோவே வெளியாகி முழுக்க முழுக்க திருப்பதி லட்டுவை ட்ரோல் செய்துள்ளனர். அசைவம் சாப்பிட மாட்டேன் என அடம்பிடித்தவர்களுக்கு ஆப்பு அடித்தது போல இந்த விஷயம் வந்திருப்பதாகவும் திருப்பதியில் அசைவம் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என சொல்லி விட்டு அவர்களே அசைவ லட்டுக்களை விற்கின்றனர் என வீடியோ முழுவதும் லட்டு தான் மேட்டராக உள்ளது.

பவன் கல்யாணை கலாய்த்து: அதிலும் உச்சபட்சமாக ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வர் பவர் ஸ்டார் பவன் கல்யாணையும் கலாய்த்து வீடியோ வெளியாகி உள்ள நிலையில், பரிதாபங்கள் டீமுக்கு எதிராக பவன் கல்யாண் ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். லட்டு பாவங்கள் வீடியோவை டெலிட் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் கிளம்பி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X