லட்டுக்குள்ள பூந்தி... ஆணுக்குள்ள பொண்ணு!

By Shankar

'லட்டுங்கறது உலகம்... அதில் பூந்திகளாக ஆண், பெண்கள்' இப்படி ஒரு விளக்கத்தோடு லட்டுக்குள்ள பூந்தி என்ற தலைப்பு வைத்து, அதில் ஒரு வித்தியாச முயற்சியாக ஆணைப் பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் நடிக்க வைத்திருக்கிறார்கள்.

இப்படத்தின் கதாநாயகனாக கிரண் மை என்ற பெண் நடிக்கிறார். கதாநாயகியாக படத்தின் இயக்குனர் ஜீன்ஸ் நடிக்கிறார். மேலும், தலைவாசல் விஜய், மகாநதி சங்கர், ஆர்த்தி, மதுமிதா ஆகியோரும் நடித்துள்ளனர். வில்லன் வேடத்தில் தேவதர்ஷினி நடிக்கிறார்.

லட்டுக்குள்ள பூந்தி

லட்டுக்குள்ள பூந்தி

இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ஜீன்ஸ். படம் குறித்து அவர் கூறும்போது, ‘லட்டுக்குள்ள பூந்தி பூந்தி' என்றால், லட்டுங்கிறது உலகம். அந்த உலகத்துல ஆணும், பெண்ணும் பூந்தி பூந்தி. நிறைய பூந்திகள் சேர்ந்தது தான் லட்டு.

ஆணாக பெண், பெண்ணாக ஆண்

ஆணாக பெண், பெண்ணாக ஆண்

அதுபோல் நிறைய ஆண்களும், பெண்களும் சேர்ந்துதான் உலகம். இந்த ஆண்கள் பெண்களாகவும், பெண்கள் ஆண்களாகவும் மாறினால் எப்படி இருக்கும் என்று ஒருவனுடைய கனவுதான் கதை! அந்த கனவு உலகத்துல ஆண்கள் எல்லோரும் பெண்களா இருக்காங்க. பெண்கள் எல்லோரும் ஆண்களா இருக்காங்க.

உல்டா உலகம்

உல்டா உலகம்

அதாவது எல்லா ஆண்களுக்கும் மீசை, தாடி எல்லாம் இருக்கும். ஆனா அவர்கள் பெண்கள் குணத்தோட மென்மையா, நளினமா இருப்பாங்க. அதுபோல பெண்கள் எல்லோரும் ஆண்களோட குணத்தோட முரட்டுத்தனமா அடாவடியா இருப்பாங்க.

சிரிப்பும் உண்டு

சிரிப்பும் உண்டு

இப்படி ஆண்களும், பெண்களும் உல்டாவா மாறி இருந்தா எப்படி இருக்கும் என்பதை யாருமே எதிர்பார்க்காத ஒரு வித்தியாசமான முறையில் சொல்லியிருக்கிறேன். நாம் பார்த்து, ரசித்த, எல்லா விஷயங்களுமே அப்படியே மாறி நடந்தா எப்படி இருக்கும் என்று யோசிச்சு பாருங்க, உங்களுக்கே சிரிப்பு வரும்.

மொத்தப் படமும் அப்படித்தான்

மொத்தப் படமும் அப்படித்தான்

இது ஒரு புதுமையான, மிகவும் வித்தியாசமான முயற்சி. உலக சினிமா வரலாற்றிலேயே மொத்தம் இரண்டரை மணி நேர படமும் ஆண்கள் எல்லோரும் பெண்களாகவும், பெண்கள் எல்லோரும் ஆண்களாகவும் நடித்து இதுவரைக்கும் எந்த படமும் வந்ததில்லை. ‘லட்டுக்குள்ள பூந்தி பூந்தி' தான் முதல் படம்.

வயிறு புண்ணாகும்

வயிறு புண்ணாகும்

இது முழுக்க முழுக்க காமெடி படம். படத்தை பார்க்கிற ரசிகர்கள் எல்லோரும் வயிறு புண்ணாகும் அளவுக்கு விழுந்து விழுந்து சிரிப்பாங்க. அதுக்கு நான் பொறுப்பு என்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க ராமோஜி பிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டுள்ளது. செல்வா ஜே.கே. இசையமைத்துள்ளார். பாஸ்கர் ஒளிப்பதிவை கவனிக்கிறார். கேல்வின் சினிமாஸ் என்ற புதிய படநிறுவனம் சார்பாக ஜீன்ஸ் மற்றும் பென்னி இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X