தனி வெப்சைட்டில் வெளியான ’லேடீஸ் நாட் அலவுட்’.. பெண்கள் பார்க்க வேண்டாம் என ஷகீலா கோரிக்கை!
சென்னை: 'லேடிஸ் நாட் அலவுட்' படத்தை பெண்கள் யாரும் பார்க்க வேண்டாம் என்ற கோரிக்கையை நடிகை ஷகீலா முன் வைத்துள்ளார்.
இந்த படத்தை ரிலீஸ் செய்ய தணிக்கை குழு லஞ்சம் கேட்பதாகக் கூறி கடந்த ஆண்டு மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி இருந்தார் ஷகீலா.
அடல்ட் படங்களில் நடித்து தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஷகீலா தயாரித்துள்ள இந்த படம் ஜூலை 20ம் தேதி வெளியானது.

அடல்ட் ஹாரர் காமெடி
இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி படங்களை போல, ஷகீலா தயாரிப்பில் உருவாகி உள்ள ‘Ladies Not Allowed' படமும் அடல்ட் ஹாரர் காமெடி படம் தான். ஏகப்பட்ட ஆபாச காட்சிகளும், டபுள் மீனிங் வசனங்களும் உள்ள பேய் படம். இந்த படத்தை ஸ்ரீராம் தசாரி என்பவர் இயக்கி உள்ளார்.

சென்சார் பிரச்சனை
ஷகீலாவின் இந்த அடல்ட் ஹாரர் காமெடி படத்துக்கு கடந்த சில ஆண்டுகளாக தணிக்கை கொடுக்காமல், சென்சார் போர்டு அதிகாரிகள் பிரச்சனை பண்ணியதாகவும், சில அதிகாரிகள் தன்னிடம் லஞ்சம் கூட கேட்டதாகவும், ஷகீலா கடந்த ஆண்டு சர்ச்சை கிளப்பி இருந்தார். இந்நிலையில், தற்போது எந்தவொரு சென்சாரும் இன்றி ஆன்லைனில் வெளியிட்டு இருக்கிறார்.

தனி வெப்சைட்
இந்த படத்தை எந்த OTT தளத்தில் ஷகீலா வெளியிடப் போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த நிலையில், கடந்த 20ம் தேதி இரவு 8 மணிக்கு https://www.ladiesnotallowed.com/ என்ற வெப்சைட்டில் இந்த படத்தை வெளியிட்டு இருக்கிறார். 50 ரூபாய் டிக்கெட்டில் இந்த படத்தை பார்க்கும் வசதியையும் ஏற்படுத்தி இருக்கிறார்.

பெண்கள் பார்க்க வேண்டாம்
ஷகீலாவின் இந்த லேடீஸ் நாட் அலவுட் படம் வெளியாகி உள்ள நிலையில், அது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ஷகீலா, இந்த படத்தை ஆண்கள் மட்டும் பாருங்கள், பெண்கள் யாரும் பார்க்க வேண்டாம். அதிகப்படியான ஆபாச காட்சிகள் இந்த படத்தில் நிறைந்து இருக்கிறது. அதே போல ஆண்களுக்கான ஒரு மெசேஜும் இருக்கு எனக் கூறியுள்ளார்.

வியாபார யுக்தி
இந்த படத்தை பார்க்காதீங்க என்றும், இந்த படத்தை பெண்கள் பார்க்க வேண்டாம் என்று சொல்வது எல்லாம் வியாபார யுக்தி என்றும், பலரையும் பார்க்க வைக்கத் தான் நடிகை ஷகீலா இப்படி வீடியோ வெளியிட்டு இருக்கிறார் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். மேலும், இந்த படத்திற்கு 50 ரூபாய் எல்லாம் ரொம்ப ஓவர் என்றும் கிண்டலடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











