Balaji Murugados: பாலாஜி முருகதாசை திடீரென அடிக்கப்பாய்ந்த ஆட்டோ டிரைவர்.. தீயாய் பரவும் வீடியோ!

சென்னை: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார் நடிகர் பாலாஜி முருகதாஸ். மாடலிங் மூலம் தன்னுடைய கேரியரை துவங்கிய இவர் பிக்பாஸ் மூலம் சிறப்பான கவனத்தை பெற்றுள்ளார். இந்நிலையில் அடுத்ததாக ஃபயர் என்ற படத்தில் இவர் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் நெகட்டிவ் ரோலில் பாலாஜி முருகதாஸ் நடித்துள்ள நிலையில், இதன் ஸ்பெஷல் ஸ்கிரீனிங்கை படக்குழுவினர் போட்டுள்ளனர். இதன்போது இவரது கேரக்டரின் தாக்கத்தால் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் இவரை அடிக்கப் பாய்ந்துள்ளார். இதன் வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்திற்கும் சந்தேகத்திற்கும் உட்படுத்தி வருகிறது.

balaji murugados bigg boss show fire movie

பாலாஜி முருகதாஸ்: மாடலாக தன்னுடைய கேரியரை துவங்கியவர் பாலாஜி முருகதாஸ். இவருக்கு விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய ஓப்பனிங்காக அமைந்தது. அந்த வகையில் கடந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இவர் இணைந்திருந்தார். இவருக்கும் நடிகர் ஆரிக்கும் இடையில் கடுமையான போட்டி இருந்த நிலையில் பாலாஜி முருகதாஸிற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகமாக கிடைத்தன. இருந்தபோதிலும் இவர் இந்த நிகழ்ச்சியின் ரன்னர் அப்பாக மாறினார். இந்த நிகழ்ச்சியின் வரவேற்பால் அடுத்ததாக பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு டைட்டிலை வெற்றி கொண்டார்.

ஃபயர் படம்: அடுத்தடுத்து இந்த நிகழ்ச்சிகள் இவருக்கு தொடர்ந்து ரசிகர்கள் வட்டாரத்தை அதிகப்படுத்தியது. இந்நிலையில் தற்போது சினிமாவில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார் பாலாஜி முருகதாஸ், அடுத்தடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் அப்டேட்டுகளையும் விமர்சனங்களையும் கொடுத்து வரும் பாலாஜி முருகதாஸ், அரசியல் குறித்த தன்னுடைய கருத்துக்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு அதிரடி காட்டி வருகிறார். இந்நிலையில் பாலாஜி முருகதாஸ் நடிப்பில் ஃபயர் என்ற படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் அவர் நாகர்கோவில் காசி என்ற கேரக்டரில் நடித்துள்ளார். உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.

பாலாஜி முருகதாசை அடிக்கப்பாய்ந்த பெண்: இதனிடையே, இந்த படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் பெண்களுக்கு போட்டுக் காட்டப்பட்டது. அதில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் உணர்ச்சிவசப்பட்டு பாலாஜி முருகதாஸை அடிக்கப் பாய்ந்தது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தனை பெண்களை ஏமாற்றி இருக்கிறாயே என்று கூறி அந்த பெண்மணி பாலாஜியின் சட்டையை பிடித்து கேள்வி எழுப்புகிறார். இதன் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலில் படக்குழுவினர் இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்தாலும் பின்னர் அவரது கேரக்டருக்கு கிடைத்த வெற்றியாக கருதி கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

பப்ளிசிட்டி ட்ரெண்ட்?: இந்நிலையில் இது பப்ளிசிட்டி ட்ரெண்டா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். முன்னதாக இந்த திரைப்படத்தில் தன்னை ஏமாற்றிவிட்டதாக பாலாஜி முருகதாஸ் சில மாதங்களுக்கு முன்பு போஸ்ட் செய்த நிலையில், அந்தப் படத்தின் நடிகை ரச்சிதாவும் தன்னை ஆபாசமாக சித்தரித்து விட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் தற்போது பெண் ஆட்டோ ஓட்டுநர் அடிக்கப் பாய்ந்ததும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X