பலாத்காரம் செய்து கருவுற்ற நிலையில் தெருவில் வீசிய தயாரிப்பாளர்.. பகீர் கிளப்பிய பிரபல பாடகி!

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல அமெரிக்க பாடகி லேடி காகா தனக்கு நேர்ந்த பாலியல் பலாத்கார சம்பவம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளது திரையுலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

35 வயதாகும் லேடி காகா பாடகியாகவும் நடிகையாகவும் ஹாலிவுட்டை கலக்கி வருகிறார்.

இந்நிலையில், தயாரிப்பாளர் ஒருவர் தன்னை பலாத்காரம் செய்து கருவுற்ற நிலையில் தெருவில் வீசிச் சென்றுள்ளதாக மனம் வெடித்து பேசியுள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது.

லேடி காகா

லேடி காகா

12 முறை கிராமி விருதுகளையும் 18 முறை எம்டிவி மியூசிக் விருதுகளையும், இரண்டு கோல்டன் குளோப், 3 பிரிட் விருதுகள் மற்றும் தலா ஒரு முறை ஆஸ்கர் மற்றும் பாஃப்டா என தனது இசையால் ஏகப்பட்ட விருதுகளை வென்று குவித்து சர்வதேச அளவில் பிரபலமானவர் பாடகி லேடி காகா.

மீ டூ இயக்கம்

மீ டூ இயக்கம்

நானும் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டேன் என ஏகப்பட்ட ஹாலிவுட் பிரபலங்கள் தயாரிப்பாளர்களுக்கு எதிராகவும், நடிகர்களுக்கு எதிராகவும் மனம் திறந்து பேச ஆரம்பித்தது மீ டூ இயக்கமாக மாறி உலகளவில் அதிர்வலைகளை எழுப்பியது. இந்நிலையில், லேடி காகாவும் தனக்கு சிறு வயதில் நேர்ந்த பாலியல் கொடூரம் குறித்து பேசியுள்ளார்.

19 வயதில் பலாத்காரம்

19 வயதில் பலாத்காரம்

35 வயதாகும் லேடி காகா தற்போது முதன் முறையாக தனது 19 வயதில் தனக்கு நேர்ந்த பாலியல் பலாத்காரம் குறித்து மனம் திறந்து ஓப்ரா வின்ஃபிரே நிகழ்ச்சியில் பேசியுள்ளது சர்வதேச அளவில் பரபரப்பை கிளப்பி உள்ளது. ஸ்டூடியோ ஒன்றில் தயாரிப்பாளர் ஒருவர் தனது ஆடைகளை கழட்ட சொல்லி வற்புறுத்தியதாகவும், அதற்கு சம்மதிக்காத நிலையில், தனது இசை ஆல்பங்களை எரிப்பதாக மிரட்டி தன்னை பலாத்காரம் செய்ததாகவும் லேடி காகா கூறியுள்ளார்.

காட்டுமிராண்டித்தனமாக

காட்டுமிராண்டித்தனமாக

தொடர்ந்து பல வாரங்களாக தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் பின்னர் பாதி கருவுற்ற நிலையில், எங்கள் வீடு இருக்கும் வீதியில் காரில் இருந்து என்னை கீழே தள்ளி விட்டு காட்டுமிராண்டித்தனமாக சென்றதகாவும் லேடி காகா தெரிவித்திருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

ஸ்டூடியோவிலேயே பூட்டிக் கிடந்தேன்

ஸ்டூடியோவிலேயே பூட்டிக் கிடந்தேன்

முதலில் மிகுந்த வலி ஏற்பட்டது. அந்த வலி பின்னர் ரணமானது. பல வாரங்கள் நோய் வாய்ப்பட்டுக் கிடந்தேன். எனக்கு நேர்ந்த கொடுமை நினைத்து மிகவும் துயரப்பட்டேன். என்னுடைய ஸ்டூடியோவிலேயே சில மாதங்கள் பூட்டிக் கொண்டு தனிமையிலேயே கிடந்தேன் என்று தனக்கு ஏற்பட்ட கொடூர சம்பவத்தை மனம் திறந்து பேசியுள்ளார்.

பயோபிக் படத்தில்

பயோபிக் படத்தில்

House of Gucci எனும் பயோபிக் கிரைம் படத்தில் தற்போது நடித்து வருகிறார் லேடி காகா. ஏற்கனவே மச்சட்டே கில்ஸ், சின் சிட்டி, காகா, எ ஸ்டார் இஸ் பார்ன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சாரா கே ஃபார்டன் எழுதிய பிரபல நாவலை தழுவி House of Gucci படம் தயாராகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X