பணிவாக இருங்கள்.. வாழ்க்கை அழகாக மாறும்.. நயன்தாரா மாணவர்களுக்கு அட்வைஸ்!
சென்னை : பணிவாக இருங்கள் அப்போது தான் வாழ்க்கை இன்னும் அழகாக மாறும் என்று நடிகை நயன்தாரா மாணவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
லேடிசூப்பர் ஸ்டார் நயன்தாரா சென்னை சத்யபாமா கல்லூரியில் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அவருடன் பிரபல நடிகர் ராணா டகுபகுதியும் கலந்துகொண்டார்.

நயன்தாரா
இந்த விழாவில் பேசிய நயன்தாரா, கல்லூரி வாழ்க்கை மிகவும் முக்கியமான ஒன்று, மகிழ்ச்சி நிறைந்தது. இந்த சமயத்தில் நீங்கள் யாருடன் இருக்க வேண்டும், யாருடன் பழகுகிறீர்கள் என்பது மிக மிக முக்கியமானது. இந்த நேரத்தில, நீங்கள் நல்ல நண்பர்களை தேர்வு செய்து பழக வேண்டும். கெட்ட நண்பர்களோடு நீங்கள் சேர்ந்தால், வாழ்க்கை மாறிவிடும். இந்த கல்லூரி நாட்களில் நீங்கள் எடுக்க கூடிய முடிவுகள் அனைத்தும் உங்கள் எதிர்காலத்திற்கானது என்பதை மறந்துவிடாதீர்கள்.

பணிவுடன் இருங்கள்
படிப்பை முடித்துவிட்டு இந்த கல்லூரியை விட்டு நீங்கள் வெளியே செல்லும் போது, சிறந்த நபராக வெற்றியடைந்த, திறமையானவராக இருக்க வேண்டும். மேலும், எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும், பணிவாகவும், நிதானமாகவும் இருக்க வேண்டும். மற்றவர்களிடம் நீங்கள் பணிவாக நடந்து கொள்ளும் போது, உங்கள் வாழ்க்கை இன்னும் அழகாக இருக்கும்.

உலகம் அழுத்தம் நிறைந்தது
கல்லூரியில் நண்பர்களோடு ஜாலியாக இருக்கலாம், ஆனால், உங்கள் பெற்றோருக்கும் நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தினமும் நீங்கள் அவர்களுக்காக ஒரு 10 நிமிடத்தை செல்வழிக்க வேண்டும், அதில் தான் அவர்களின் மகிழ்ச்சியே இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள். இந்த போட்டி உலகத்தால் நிறைய அழுத்தம் கொடுக்கப்படும் அதில் இருந்து நீங்கள் சிறந்தவராக இருக்க வேண்டும் என்று நயன்தாரா மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.

ஜவான் படத்தில்
நயன்தாரா தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில், ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து ஜெயம் ரவியுடன் இணைந்து இறைவன் படத்திலும் நயன்தாரா நடித்து வருகிறார். அகமது இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படம் ஜெயம் ரவி நயன்தாரா காம்பினேஷனில் மிகவும் எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











