அம்பானி வீட்டு கல்யாணத்தில் ஜோடி ஜோடியா கலந்து கொண்ட நயன் - விக்கி, ஜோ - சூர்யா!
மும்பை: இந்தியாவின் முன்னணி தொழிலதிபரும் இந்தியாவின் முதன்மை பணக்காரராக உள்ள முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சென்ட் ஆகியோரின் திருமண விழா நேற்று அதாவது ஜூலை மாதம் 12ஆம் தேதி பிரம்மாண்டமாக நடை பெற்றது. இந்நிலையில் திருமணக் கொண்டாட்டம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் இருந்தே உலகமே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு நடைபெற்றது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் திருமணக் கொண்டாட்டத்தினை அம்பானி குடும்பம் செய்திருந்தது.
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சென்ட் திருமண விழா தொடர்பான வீடியோக்கள் இணையத்தை ஆக்கிரமித்தபடி உள்ளது. மும்பையிலுள்ள ஜியோ வோர்ல்டு கன்வென்ஷன் சென்டரில் இந்த திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீதா அம்பானி ஆகியோர் தங்களது இளைய மகனின் திருமணத்திற்காக பிரம்மாண்டமான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். அதாவது, உலகத்தின் பல்வேறு நாடுகளில் உள்ள பிரபலங்களை அழைத்து நிகழ்ச்சிகளை நடத்தினர்.

இது மட்டும் இல்லாமல் தனது இளைய மகனின் திருமணத்தினை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பிரமாண்டமாக நடத்தி வருகின்றனர். தனது மகனின் திருமணத்திற்காக மட்டும் பல லட்சக்கணக்கான கோடிகளை அம்பானி செலவழித்து வருகின்றார். மேலும் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் வீட்டுக் கல்யாணம் என்பதால் இந்தியாவில் உள்ள அனைத்து பிரபலங்களுக்கும் அழைப்பு சென்றுள்ளது.
பிரியங்கா சோப்ரா: இதனால் சினிமா பிரபலங்கள் தொடங்கி கிரிக்கெட் வீரர்- வீராங்கனைகள் உள்ளிட்ட பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் உலகத்தின் பல்வேறு நாடுகளில் இருந்தெல்லாம் இந்த நிகழ்ச்சிக்காக இந்தியா திரும்பிக் கொண்டு உள்ளனர். குறிப்பாக ஷாருக்கான் வெளிநாட்டில் நடந்து கொண்டு இருந்த தனது படப்பிடிப்பினை நிறுத்தி விட்டு வந்துள்ளார். அதேபோல் அமெரிக்காவில் செட்டில் ஆகி, தற்போது ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பில் இருந்த பிரியங்கா சோப்ராவும் தனது படப்பிடிப்பை நிறுத்திவிட்டு தனது கணவருடன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு வந்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்: மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். குறிப்பாக, முதலில் தனது குடும்பத்தினருடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். அதன் பின்னர் நிரூபர்கள் தனியாக போஸ் கொடுக்கும்படி கேட்க, சிரித்த முகத்துடன் ஸ்டைலாகவும் மாஸாகவும் நின்று போஸ் கொடுத்து அசத்தினார். குறிப்பாக வேட்டி சட்டையில் மாஸாக வந்திருந்த சூப்பர் ஸ்டார் படையப்பா படத்தில் வரும் வசனத்தைப் போல, வயசானாலும் உன்னோட ஸ்டைலும் அழகும் இன்னும் உன்ன விட்டு போகல" என்பது சரி என்பதைப் போலவே நடந்து கொண்டார்.
லேடி சூப்பர் ஸ்டார்: ஜவான் படத்தின் மூலம் ஹிந்தி திரையுலகில் காலடி எடுத்து வைத்தது மட்டும் இல்லாமல் வெற்றிக்கொடி நாட்டிய நயன்தாராவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் திருமண நிகழ்வில் கலந்து கொண்டார். அதேபோல் நடிகர் சூர்யா தனது மனைவியும் நடிகையுமான ஜோதிகாவுடன் கலந்து கொண்டார். நடிகர் பிருத்விராஜ் தனது மனைவியுடன் ஆனந்த் அம்பானி திருமணத்தில் கலந்து கொண்டார்.


Click it and Unblock the Notifications











