லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்திக்கு இன்று பிறந்தநாள்.. ரசிகர்கள் வாழ்த்து மழை !
சென்னை : போலீஸ் படங்களில் பொதுவாக ஹீரோக்கள் மட்டுமே மாஸ் காட்டி வந்த வேளையில், யாரும் எதிர் பார்க்காதவாறு பெண் போலீசாக வந்து ஹீரோக்களுக்கு இணையாக அனைவரையும் அக்சனில் மிரட்டியவர் நடிகை விஜயசாந்தி.
இவ்வாறு விஜயசாந்தி என்ற பெயரைக் கேட்டவுடனே நமக்குள் முதலில் தோன்றுவது அந்த கம்பீரமான போலீஸ் தோற்றம் அவ்வாறு பல கதாபாத்திரங்களில் நம்மை ரசிக்க வைத்த விஜயசாந்திக்கு இன்று பிறந்தநாள்.
ஜூன் 24-ஆம் தேதியன்று இவர் தனது 54 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் இவருக்கு திரைத்துறையில் இருந்து பலரும் வாழ்த்துக்களைச் சொல்லி வருகின்றனர்.

கல்லுக்குள் ஈரம்
1980 மற்றும் 90 களில் தமிழ், தெலுங்கு என எண்ணற்ற படங்களில் நடித்து இன்று வரை கிட்டத்தட்ட 180 படங்களுக்கு மேல் நடத்து தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் கொடிகட்டிப் பறந்து வந்தவர் விஜயசாந்தி. இவர் இயக்குனர் பாரதிராஜா உடன் இணைந்து நடித்த கல்லுக்குள் ஈரம் என்ற படத்தின் மூலம் நடித்து தமிழ் திரைக்குள் அறிமுகமானார்.

வெற்றியுடன் வலம்
அறிமுகமான சில காலங்களிலேயே அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்து இவருக்கென ஒரு தனிச் சிறப்பை பெற்று வெற்றியுடன் வலம் வந்தார். இந்நிலையில் பொதுவாக போலீஸ் அதிகாரி என்றால் பெரும்பாலும் நமக்கு நினைவில் வருவது மாஸ் காட்டும் கதாநாயகர்களாக தான் இருக்க முடியும்.

வைஜயந்தி ஐபிஎஸ்
இவர் முதன்முதலாக கர்தவ்யம் என்ற தெலுங்குப் படத்தில் போலீஸ் அதிகாரியாக வந்து ஆக்சனில் மிரட்டியிருப்பார். இந்த படம் தெலுங்கு திரைத் துறையில் மிகப்பெரிய வெற்றி அடைந்து வசூலை அளித்து வந்த நிலையில் இந்த படம் தமிழிலும் வைஜயந்தி ஐபிஎஸ் என்ற பெயரில் டப் செய்து வெளியிடப்பட்டு இங்கு மிகப்பெரிய வெற்றியடைந்து பாக்ஸ் ஆபிஸில் கலக்கியது.

தேசிய விருது
இவ்வாறு ஆக்சனில் கலக்கிய வைஜயந்தி படத்திற்காக விஜயசாந்தி சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் பெற்றிருக்கிறார். மேலும் இந்த படத்தின் கதை கிரண்பேடி ஐபிஎஸ்-ன் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை முன்மாதிரியாக கொண்டு உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்நாள் சாதனையாளர்
இவ்வாறு திரைப்படத்துறையில் கதாநாயகர்களுக்கு இணையாக பல சாதனைகளை செய்து வந்த இவர் சிறந்த நடிகைக்காக கலைமாமணி விருது, தமிழ்நாடு அரசு விருது மற்றும் ஏழு முறை பிலிம்பேர் விருதுகளையும், ஆறுமுறை வாழ்நாள் சாதனையாளர் விருதையும் பெற்றுள்ளார்.

லேடி அமிதாப்
இவ்வாறு பல படங்களில் கொடிகட்டிப் பறந்த வந்த இவருக்கு அப்போது ரசிகர்கள் அனைவரும் லேடி சூப்பர்ஸ்டார் என்றும் லேடி அமிதாப் என்றும் பல அடைமொழி பெயர்களை வைத்து கூப்பிட்டு அவரை ரசித்து வந்தனர்.

கோடி ரூபாய்
80 மற்றும் 90களில் கொடிகட்டி பறந்தவர் தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கர்தவ்யம் என்ற மாபெரும் வெற்றிபெற்ற படத்திற்காக முதன் முதலில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெற்ற முதல் நடிகை என்ற பெருமை இவரை மட்டுமே சேரும்.

ரீ-என்ட்ரி
இவ்வாறு மன்னன், மெக்கானிக் மாப்பிள்ளை, போலீஸ் லாக்கப், வைஜயந்தி ஐபிஎஸ், ராஜஸ்தான் போன்ற பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து 90களில் தென்னிந்திய சினிமாவின் மகாராணியாக வலம் வந்த விஜயசாந்தி கடைசியாக தெலுங்கில் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடித்த சரிலேரு நீகேவ்வாரு என்ற படத்தில் மீண்டும் நீண்ட நாட்களுக்கு பிறகு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.
Recommended Video

பிறந்தநாள்
சூப்பர் ஹிட் படங்களின் மூலம் நம்முள் நீங்கா இடம் பிடித்திருக்கும் லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்திக்கு இன்று பிறந்தநாள். ஜூன் 24 ஆம் தேதியான இன்று இவர் தனது பிறந்தநாளை வெகுவிமர்சையாக மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார். இவருக்கு திரைப்பட ரசிகர்கள், நண்பர்கள், திரைத்துறை நண்பர்கள் என பலரும் வாழ்த்துக்களை கூறி வாழ்த்து மழையில் நனைய வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











