Lady Superstar 75: நயனுடன் இணைந்த ரஜினி... லேடி சூப்பர் ஸ்டார் 75 படத்தில் ஒரு மேஜிக்!
சென்னை: இந்தியில் அட்லீ இயக்கும் ஜவான் படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நடித்து வருகிறார் நயன்தாரா.
இதனைத் தொடர்ந்து நயன்தாரா நடிக்கவுள்ள லேடி சூப்பர் ஸ்டார் 75 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
ஷங்கரின் உதவியாளர் நீல் கிருஷ்ணா இயக்கும் இந்தப் படத்தை ஜீ ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது.
இந்நிலையில், லேடி சூப்பர் ஸ்டார் 75 படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியும் இணைந்துள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

லேடி சூப்பர் ஸ்டாருடன் இணைந்த சூப்பர் ஸ்டார்
கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நயன்தாரா, தற்போது ஜவான் படத்தில் நடித்து வருகிறார். அட்லீ இயக்கத்தில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானுக்கு ஜோடியாகியுள்ள நயன், தமிழிலும் அடுத்தடுத்து பிஸியாகிவிட்டார். ஐயா படம் மூலம் அறிமுகமான நயன், தற்போது அவரது 75வது படத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்திற்கு தற்காலிகமாக லேடி சூப்பர் ஸ்டார் 75 என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. நயன்தாரா ஜோடியாக ஜெய் நடிக்கவுள்ளார், மேலும் சத்யராஜ், கேஎஸ் ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் கமிட் ஆகியுள்ளனர். ஷங்கரின் அசிஸ்டெண்ட் நீல் கிருஷ்ணா இயக்கும் இந்தப் படத்தை ஜீ ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது, தமன் இசையமைப்பாளராக கமிட் ஆகியுள்ளார்.

இந்நிலையில், இந்தப் படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியது. சென்னையில் தொடங்கிய இந்த பூஜை விழாவில் ஜெய், சத்யராஜ், கேஎஸ் ரவிக்குமார் உட்பட படக்குழுவினரும் கலந்துகொண்டனர். வால்வோ காரில் ஸ்டைலாக கெத்தாக என்ட்ரி கொடுக்கும் நயன்தாரா, இந்தப் படத்தின் முதல் காட்சியில் நடித்துள்ளார். முக்கியமாக இதில், சூப்பர் ஸ்டார் ரஜினியும் இணைந்துள்ளார்.
லேடி சூப்பர் ஸ்டார் 75 படத்தின் கிளாப் போர்டில், ஆட்டோகிராப் போட்டு ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளது படக்குழுவினரை உற்சாகப்படுத்தியுள்ளது. ரஜினி வாழ்த்து கூறியது உட்பட லேடி சூப்பர் ஸ்டார் 75 படத்தின் பூஜை விழா அனைத்தையும் வீடியோவாக வெளியிட்டுள்ளது படக்குழு. நயனுக்காக சூப்பர் ஸ்டார் ரஜினியும் லேடி சூப்பர் ஸ்டார் 75 பட பூஜையில் முகம் காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சந்திரமுகி படத்தில் ரஜினியுடன் முதன்முறையாக ஜோடி சேர்ந்தார் நயன்தாரா. அதன்பின்னர் சிவாஜி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியதோடு, தர்பார், அண்ணாத்த படங்களிலும் சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேர்ந்திருந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஃபேவரைட் ஹீரோயின் லிஸ்ட்டில் நயன்தாராவுக்கும் முக்கியமான இடம் உள்ளது. அதன்படியே லேடி சூப்பர் ஸ்டார் 75 பட பூஜை விழாவில் ரஜினி பங்கேற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











