GOAT: தளபதியின் கோட் படத்தை பார்க்க ஜோடியாக வந்த லேடி சூப்பர் ஸ்டார்.. வீடியோவ பாருங்க!

பெங்களூர்: தளபதி விஜய் கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடித்து வெளியாகியுள்ள படம் தி கோட். இந்தப் படம் இந்தியா மட்டும் இல்லாமல் 40க்கும் மேற்பட்ட வெளிநாடுகளிலும் ரிலீஸ் செய்யப்பட்டது. படம் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தினை தமிழ்நாடு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக படத்தினைப் பார்த்த ரசிகர்கள் அழகிய தமிழ் மகன் படத்திற்குப் பின்னர் விஜய்யை நெகடிவ் கதாபாத்திரத்தில் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது என கூறி வருகின்றனர். படம் முதல் நாளே உலகம் முழுவதும் ரூபாய் 126.32 கோடிகளை வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து படம் பார்க்க வந்தார்.

நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகி முழுக்க முழுக்க அரசியலில் ஈடுபடப்போவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டார். இதனால் கோட் படம், அவரது சினிமா வாழ்க்கையில் கடைசி இரண்டாவது படமாக அமைந்துள்ளது. படம் ரிலீஸ் ஆனதில் இருந்து படம் பார்த்த ரசிகர்கள் படத்தினைக் கொண்டாடி வருகின்றனர். படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். அவருடன், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், ஜெயராம், பிரேம் ஜி, வைபவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். த்ரிஷா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். சிவகார்த்திகேயன் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

goat vijay nayanthara

படம் பார்த்த ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் மேல் சர்ப்ரைஸ் கொடுத்துக் கொண்டே இருந்தார் இயக்குநர் வெங்கட் பிரபு. குறிப்பாக தோனி களமிறங்கும் காட்சியெல்லாம் திரையில் காட்டப்பட்டபோது ரசிகர்கள் ஆரவாரத்தால் திரையரங்கமே அதிர்ந்தது. படம் தமிழ் நாட்டில் மட்டும் சோலோவாக 1,100 திரையரங்குகளில் வெளியானது. இதுமட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் சுமார் 5000 திரையரங்குகளில் படம் ரிலீஸ் செய்யப்பட்டது. படம் முதல் நாளே பாக்ஸ் ஆஃபீஸில் ரூபாய் 126.32 கோடிகளை உலகம் முழுவதும் வசூல் செய்ததாக படக்குழு அறிவித்துள்ளது.

லாபம்: படத்தின் மொத்த பட்ஜெட்டே ரூபாய் 400 கோடிதான். இதில் முதல் நாளே படம் ரூபாய் 126.32 கோடி வசூல் செய்துவிட்டதால், இந்த வார இறுதிக்குள் படம் கிட்டத்தட்ட ரூபாய் 500 கோடி வசூல் செய்துவிடும் என கூறப்படுகின்றது. இது படத்தினை தயாரித்த தயாரிப்பு நிறுவனத்திற்கு லாபத்தை அசால்ட்டாக ஈட்டிக் கொடுத்துவிடும் என கூறுகின்றனர்.

goat vijay nayanthara

நயன் - விக்கி: படம் ரிலீஸ் ஆன தினத்திலேயே நடிகை த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், நடிகர் சிவகார்த்திகேயன் என அனைவரும் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தனர். இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் வெளியானது. இதில், சிவகார்த்திகேயன் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். த்ரிஷா மட்ட பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்நிலையில் பெங்களூரில் உள்ள பிரபல திரையரங்கில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் அவரது கணவரும் இயக்குநருமான நயன்தாரா ஆகியோர் இணைந்து படம் பார்க்க வந்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

வசூல் விபரம்: படம் இரண்டாவது நாளில் இந்தியா முழுவதும் பாக்ஸ் ஆஃபீஸில், ரூபாய் 25 கோடி வசூல் செய்ததாக பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் படம் உலகம் முழுவதும் எப்படியும் ரூபாய் 100 கோடிகளை வசூல் செய்திருக்கும் என கூறப்படுகின்றது. இதனால் முதல் இரண்டு நாளில் படம் ரூபாய் 230 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்திருக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகின்றது. மேலும் இன்றும் நாளையும் விநாயகர் சதுர்த்தி மற்றும் வார இறுதி நாள் என்பதால், படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என படக்குழு நம்புகின்றது.

goat vijay nayanthara

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X