குழந்தைகளுடன் விநாயகர் சதூர்த்தி கொண்டாடிய விக்கி - நயன் தம்பதி.. ஃபோட்டோஸ் எல்லாம் செம க்யூட்!

சென்னை: தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் எனப்படுபவர் நடிகை நயன்தாரா. இவருக்கு உள்ள ரசிகர்கள் பட்டாளத்தினாலேயே இவருக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் சூட்டப்பட்டுள்ளது. முன்னணி கதாநாயகர்களுடன் நடித்தாலும் சரி, வுமன் செண்ட்ரிக் படங்களில் நடிதாலும் சரி, தனது கதாபாத்திரத்தை சிறப்பாக கையாண்டு, அதன் மூலம் கதாபாத்திரத்தின் தரத்தை இயக்குநர் மனதில் இருந்ததைவிட கூடுதல் உயரத்திற்கு கொண்டு செல்லும் தன்மை கொண்ட நடிகை.

இவர் நேற்று அதாவது செப்டம்பர் 7ஆம் தேதி தனது வீட்டில், குடும்பத்தினருடன் விநாயகர் சதூர்த்தி (Vinayagar Chaturthi 2024) கொண்டாடியுள்ளார். அதுகுறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

nayanthara vignesh shivan vinayagar chaturthi 2024 2024

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர்களில் நயன்தாராவும் ஒருவர். இவரை இவரது ரசிகர்கள் நயன் என்றும் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைத்து வருகின்றனர். தொடக்கத்தில் படங்களில் நடித்து வந்த நயன் தனது திருமணத்திற்குப் பின்னர் ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தனது கணவரான இயக்குநர் விக்னேஷ் சிவன் உடன் உருவாக்கி படத்தயாரிப்புகளிலும் ஈடுபட்டு வருகின்றார்.

nayanthara vignesh shivan vinayagar chaturthi 2024 2024

நானும் ரவுடிதான் படத்தின் கதையைச் சொல்லச் சென்றபோது, நயன்தாராவைப் பார்த்துவிட்டு வந்துவிடலாம், எப்படியும் நாம் சொல்லும் கதையை அவர் வேண்டாம் எனக் கூறிவிடுவார் என்ற எண்ணத்தில் சென்றவர்தான் விக்னேஷ் சிவன். ஆனால் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட நடிகை நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் படத்தில் பணிபுரியும்போதே, இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.

nayanthara vignesh shivan vinayagar chaturthi 2024 2024

அதன் பின்னர் இவர்கள் இருவரும் கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். மேலும் வாடகைத் தாய் மூலம், இரட்டை ஆண்குழந்தைகளை பெற்றெடுத்தனர். அவர்களுக்கு உயிர் மற்றும் உலக் எனப் பெயரிட்டுள்ளனர்.

nayanthara vignesh shivan vinayagar chaturthi 2024 2024

விநாயகர் சதூர்த்தி: இந்த ஜோடி தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களால் விரும்பப்படும் ஜோடியாக உள்ளனர். இது மட்டும் இல்லாமல் இவர்கள் அடிக்கடி தங்களது சமூக வலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்ளுக்கும் வீடியோக்களுக்கும் ரசிகர்கள் லைக்குகளும் வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் தனது எக்ஸ் பக்கத்திலும் தனது இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய புகைப்படங்களைப் ஒரு வீடியோவாக தயார் செய்து பகிர்ந்துள்ளார்.

க்யூட்: நயனின் இந்த போஸ்ட்டுக்கு அவரது லட்சக்கணக்கான ரசிகர்கள் லைக்குகளை அள்ளிக்கொடுத்து வருகின்றனர். மேலும், பலர் நயன் மற்றும் அவரது குடும்பத்தினர் அழகாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர். ஒரு சிலரோ நயனின் குழந்தைகளான உயிர் மற்றும் உலக் இருவரும் செம க்யூட்டாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

nayanthara vignesh shivan vinayagar chaturthi 2024 2024

கோட்: அண்மையில் வெளியாகி திரையரங்குகளில் வசூலில் கெத்து காட்டி வரும் படமான விஜய்யின் தி கோட் படத்தினைப் பார்க்க, நடிகை நயன் மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் ஆகியோர் பெங்களூரில் உள்ள ஒரு திரையரங்கிற்குச் சென்றனர். இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வேகமாக பரவியது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X