நயன்தாராவா இது.. ஆளே அடையாளம் தெரியலையப்பா.. மிரட்டும் ‘நெற்றிக்கண்’ ஃபர்ஸ்ட் லுக்!

சென்னை: லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் 'நெற்றிக்கண்' ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி மிரட்டி வருகிறது.

நடிகர்கள் சித்தார்த், ஆண்ட்ரியா நடிப்பில் ஹாலிவுட் ஸ்டைலில் உருவான 'அவள்' பேய் படத்தை இயக்கிய இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

ரவுடி பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, இந்த படத்தை தயாரித்து வருகிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

தயாரிப்பாளர் ஆன இயக்குநர்

தயாரிப்பாளர் ஆன இயக்குநர்

போடா போடி, நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம் என மூன்று படங்களை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் சிவன், இப்போ தயாரிப்பாளரா அவதாரம் எடுத்துள்ளார். அதுவும் தன்னோட லவ்வர் மற்றும் லேடி சூப்பர்ஸ்டாரான நயன்தாராவை வைத்தே தனது முதல் படத்தை தயாரித்து வருகிறார்.

ரிலீசாகாத முதல் படம்

ரிலீசாகாத முதல் படம்

நடிகர் ஆர்யா மற்றும் ‘குத்து' ரம்யாவை வைத்து இவர் இயக்கிய காதல் டு கல்யாணம் திரைப்படம் 2013ம் ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகாமல் பல்வேறு காரணங்களுக்காக அப்படியே டிராப் செய்யப்பட்டது. கடந்த 2017ல் இவர் இயக்கிய அவள் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அவள்

அவள்

நடிகர்கள் சித்தார்த், ஆண்ட்ரியா நடிப்பில் கடந்த 2017ல் வெளியான அவள் படத்தை ஹாலிவுட் ஸ்டைல் பேய் படமாக இயக்கி மிரள வைத்தார் மிலிந்த் ராவ். ஆனால், நடிகர் சித்தார்த் எப்படி படம் நடித்தாலும் சுமாராகவே ஓடுவது போல அந்த படமும் பெரியளவில் வசூலை குவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நெற்றிக்கண் ஃபர்ஸ்ட் லுக்

நெற்றிக்கண் ஃபர்ஸ்ட் லுக்

அவள் படத்தைத் தொடர்ந்து தற்போது நடிகை நயன்தாராவை வைத்து, ‘நெற்றிக்கண்' எனும் மிரட்டலான த்ரில்லர் படத்தை இயக்கி வருகிறார் மிலிந்த் ராவ். விக்னேஷ் சிவன் தனது ரவுடி பிக்சர்ஸ் மூலமாக தயாரித்துள்ள முதல் படமான இந்த படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

பார்வையற்ற பெண்ணாக

பார்வையற்ற பெண்ணாக

ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்த ரசிகர்கள், நயன்தாராவா இது? என ஆச்சர்யப்படும் அளவுக்கு பார்வையற்ற பெண்ணாக ஃபர்ஸ்ட் லுக்கிலே வித்தியாசமான தோற்றத்தில் கையில் கம்பி, ரத்தம் வடியும் முகம், ஹாலிவுட் ஹீரொயின் லுக் என முற்றிலும் வேறுபட்டு காட்சி தருகிறார் நயன்தாரா.

வரிசையாக

வரிசையாக

மூக்குத்தி அம்மன், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் என லைன் கட்டி நயன்தாராவின் படங்கள் ரெடியாகி வருகின்றன. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பட டைட்டிலான நெற்றிக்கண் தலைப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் ரிலீஸ் எப்போது என்றும் ரசிகர்கள் ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்தே ரொம்பவே ஆவலாகி விட்டனர்.

அந்த படம் மாதிரி இருக்காதுல

அந்த படம் மாதிரி இருக்காதுல

மேலும், இயக்குநர் சக்ரி டொலட்டி இயக்கத்தில் நயன்தாரா நடித்த கொலையுதிர் காலம் படம் மாதிரி சூர மொக்கையாக இந்த படம் இருக்காதுல என்கிற சந்தேகத்தையும் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கிளப்பி வருகின்றனர். ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட ராக்ஸ்டார் அனிருத், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்து கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X