Nayanthara: காலையிலேயே ரொமான்ஸா.. விக்கி - நயன் ஃபோட்டோ ஒவ்வொன்றிலும் லவ் பொங்குதே!
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர்களில் நயன்தாராவும் ஒருவர். இவரை இவரது ரசிகர்கள் நயன் என்றும் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைத்து வருகின்றனர். தொடக்கத்தில் படங்களில் நடித்து வந்த நயன் தனது திருமணத்திற்குப் பின்னர் ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தனது கணவரான இயக்குநர் விக்னேஷ் சிவன் உடன் உருவாக்கி படத்தயாரிப்புகளிலும் ஈடுபட்டு வருகின்றார்.
நானும் ரவுடிதான் படத்தின் கதையைச் சொல்லச் சென்றபோது, நயன்தாராவைப் பார்த்துவிட்டு வந்துவிடலாம், எப்படியும் நாம் சொல்லும் கதையை அவர் வேண்டாம் எனக் கூறிவிடுவார் என்ற எண்ணத்தில் சென்றவர்தான் விக்னேஷ் சிவன். ஆனால் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட நடிகை நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் படத்தில் பணிபுரியும்போதே, இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. அதன் பின்னர் இவர்கள் இருவரும் கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். மேலும் வாடகைத் தாய் மூலம், இரட்டை ஆண்குழந்தைகளை பெற்றெடுத்தனர். அவர்களுக்கு உயிர் மற்றும் உலக் எனப் பெயரிட்டுள்ளனர்.

இந்த ஜோடி தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களால் விரும்பப்படும் ஜோடியாக உள்ளனர். இது மட்டும் இல்லாமல் இவர்கள் அடிக்கடி தங்களது சமூக வலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்ளுக்கும் வீடியோக்களுக்கும் ரசிகர்கள் லைக்குகளும் வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகளான உயிர் மற்றும் உலக் உடன் இணைந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

ரொமான்ஸ்: இதில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இணைந்து நடந்து வரும் புகைப்படங்களைப் பார்க்கவே மிகவும் அழகாக உள்ளது. நானும் ரௌடிதான் படத்தில் இடம் பெற்றுள்ள, கண்ணான கண்ணே பட பாடலில் இடம் பெற்றுள்ள வரிகளான, உன் விரல் இடுக்குல என் விரல் கிடக்கனும், உசூருல்ல வரைக்குமே உனக்கென்ன பிடிக்கனும் எனும் வரிகளுக்கு ஏற்ற வகையில் உள்ளது. இந்த புகைப்படங்களுக்கு நடிகை நயன்தாரா ஆங்கிலத்தில் மைன் என கேப்ஷன் இட்டுள்ளார்.

படங்கள்: நயன்தாரா நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் மண்ணாங்கட்டி. இந்தப் படத்தினை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக பேச்சுகள் அடிபடுகின்றது. மேலும் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். நயன் தாரா குறித்து சமீபத்தில் வெளியான தகவல்களில் மிகவும் பரபரப்பைக் ஏற்படுத்திய தகவல் என்றால், அது அவருடைய அப்பார்ட்மெண்ட்டில் அவர் நடந்து கொள்ளும் விதம் தொடர்பாகத்தான்.

அப்பார்ட்மெண்ட்: குறிப்பாக, "நடிகை நயன்தாரா வீட்டு வாசலில் எக்கச்சக்கமான செருப்புகள் எப்போதும் வழியை அடைத்தபடி கிடக்குமாம். மேலும் நயன்தாரா அப்பார்ட்மெண்டில் நடந்து வரும்போது எதிரே யாரும் வரக்கூடாதாம். தங்களது குழந்தைகள் நீச்சல் குளத்தில் விளையாடும்போது மற்றவர்கள் அவர்களை போட்டோ எடுப்பதை ஒருபோதும் அனுமதிப்பது இல்லையாம். மேலும், தங்களது வீட்டிற்கு உணவு டெலிவரி செய்யவரும் உணவு டெலிவரி ஊழியர்கள் சேவகர்கள்போல ஒரு ஓரமாக நின்றுதான் உணவை கொடுத்துவிட்டு வரவேண்டுமாம். இவ்வாறு பல கண்டிஷன்கள் போட்டபடிதான் அந்த அப்பார்ட்மெண்டில் நயன்தாரா குடும்பத்தினர் இருக்கின்றனராம்" என்பதுதான்


Click it and Unblock the Notifications











