»   »  'சூப்பர் ஸ்டார்' பேராசையால் குப்புற விழுந்த நயன் தாரா!

'சூப்பர் ஸ்டார்' பேராசையால் குப்புற விழுந்த நயன் தாரா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவில் என்றும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும்தான். அந்த பட்டத்தை யாராவது காப்பியடிக்க முயன்றால் அவர்களை தமிழ் ரசிகர்களே குப்புறத் தள்ளிவிடுவார்கள்.

இதற்கு சமீபத்திய உதாரணமான லாரன்ஸுடன் சேர்ந்திருக்கிறார் நயன் தாரா.


Lady Superstar's big flop Dora

சில நாட்களுக்கு முன்பு மொட்ட சிவா கெட்ட சிவா படம் வெளியானது. டைட்டிலில் மக்கள் சூப்பர் ஸ்டார் என்று லாரன்ஸுக்கு பட்டம் கொடுத்திருந்தார்கள். விளைவு உலக வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு படம் டைட்டில் கார்டு போடும்போதே ஃப்ளாப் ஆனது.


இந்த செய்தியை தெரிந்தும் கூட நயன் தாரா தனது படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் என்று போட்டுக்கொண்டார். கடந்த வாரம் ரிலீஸான டோரா படத்தில்தான் இந்தக் கூத்து நடந்தது. நயனுக்கு 90 அடியில் கட் அவுட் எல்லாம் வைத்தார்கள். முடிவு? வழக்கம்போலத்தான்.


டோரா ஃப்ளாப் லிஸ்டில் சேர்ந்து நயனின் கேரியருக்கு பெரிய ஆப்பு வைத்துவிட்டது. படத்தில் அடம் பிடித்து டப்பிங் பேசிய நயன் வாய்ஸும் அவரது கேரக்டருக்கு பொருந்தாமல் போய்விட்டது.


நயன் பின்னால் போன தயாரிப்பாளர்கள் எல்லாம் யு டர்ன் அடிக்கிறார்கள் இப்போது. தகுதிக்கு மீறி ஆசைப்பட்டா இப்படித்தான் என கிசுகிசுப்பு கேட்க ஆரம்பித்துவிட்டது...!

English summary
Actress Nayanthara's recently released Dora movie became a big flop in her career after she used superstar title for her.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil